EPS : அதிமுக பிச்சை போட்டதால் தான் மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி ஆகியுள்ளார்.! விளாசும் எடப்பாடி பழனிசாமி
மாநிலத்திலையே ஒன்னும் செய்ய முடியாத ஸ்டாலின் இந்தியாவை காக்க போகிறாராம் என விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைக்குண்டம் போனான் என்பது ஸ்டாலினுக்கு பொருந்தும் என்றும் தெரிவித்தார்.
திமுகவும், பாஜகவும் ஒன்றும் செய்யவில்லை
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. இந்தநிலையில், விழுப்புரம் தொகுதி அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் பாக்கியராஜ்யை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விழுப்புரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
ஸ்டாலின் மாநிலத்திலும் மத்தியில் பாஜக மோடி ஆட்சி செய்கிறார்கள் இரண்டு கட்சிகளும் ஒன்றும் செய்யவில்லை என விமர்சித்தார். தமிழகத்தை மாற்றான் தாய் பிள்ளை போல் பார்ப்பதாகவும் எதிர்கட்சிகள் ஆட்சி செய்தால் மத்திய அரசு நிதி அளிப்பதில்லை அது பாஜக அரசாகவும் காங்கிரஸ் அரசாக இருந்தாலும் இரண்டு அரசுகளும் இதையே தான் செய்கிறார்கள் என கூறினார். ஜி எஸ் டி வருவாய் அதிகம் செலுத்தினாலும் தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை என கடும் விமர்சனம் செய்தார்.
அந்த 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமில்ல.. திமுக, அதிமுகவை போட்டு கொடுத்த நயினார் நாகேந்திரன்..!
திமுகவில் 4 முதலமைச்சர்கள்
திமுக அரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் நீதிமன்றங்களில் ஏறி இறங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கினை திமுக அரசு போடுவதாக குற்றஞ்சாட்டினார். திமுக கட்சி என்பது குடும்ப கட்சியாக உள்ளது அதில் நான்கு முதல்வர்கள் உள்ளார்கள் உதயநிதி ஸ்டாலின், சபரீசன், துர்கா ஸ்டாலின் தான் முதல்வராக உள்ளதாகவும் திமுகவில் அவர்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் தான் முதல்வராக வர முடியும் என கூறினார். இளைஞர்களுக்கு கல்வி கடன் ரத்து செய்யப்படவில்லை என்றும் தேர்தலில் கொடுத்த வாக்குறிதை நிறைவேற்றாமல் திமுக அரசு செயல்படுவதாக வீடு கட்டுவதற்கு கட்டுமான பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளதாகவும், வீடு கட்டுவது திமுக ஆட்சியில் கனவில் தான் நடைபெறும் என கூறினார். அதிமுகவில் செந்தில்பாலாஜி இருந்தால் ஊழல் வாதி, திமுகவிற்கு சென்றால் அவர் உத்தமராகிவிடுவாரா என கேள்வி எழுப்பினார்.
அராஜகம் பிடித்த கட்சியாக திமுக உள்ளதாகவும் மதத்தின் அடிப்படையில் அதிமுக ஒருபோதும் பிரித்து பார்க்காது என்றும் இந்தியாவிலையே முதல் மாநிலமாக கடன் வாங்குவதில் சூப்பர் முதல்வராக ஸ்டாலின் உள்ளார் எனவும் கூறினார். புகார் பெட்டி மூலம் மனுக்களை பெற்று மக்களை ஏமாற்றியவர்தான் ஸ்டாலின் என தெரிவித்தவர், தற்போது இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைப்பதாக கூறுகிறார். மாநிலத்திலையே ஒன்னும் செய்ய முடியாத அவர் இந்தியாவை காக்க போகிறாராம் என விமர்சித்தார். கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைக்குண்டம் போனான் என்பது ஸ்டாலினுக்கு பொருந்தும் என்றும் தெரிவித்தார்.
வாரிசு அரசியல் கட்சி பாமக
அய்யோ பிச்சை போடுங்கள், அய்யோ பிச்சை போடுங்கள் என அதிமுக, திமுக கேட்பதாக அன்புமனி தெரிவித்துள்ளார். பிச்சை போடுங்கள் பிச்சை போடுங்கள் என்கிறார் பிச்சை போட்டதால் தான் மாநிலங்களவை உறுபினராக அன்புமணி ஆகியுள்ளதாகவும் விமர்சித்தார். அதிமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்திருப்போம் என தெரிவித்தார். ஆனால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என பாஜக அறிவித்துள்ளது. அந்த கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.
கூட்டணி தர்மம் என்றால் அதிமுகவிற்கு மட்டுமே பொருந்தும். மோடி வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கூறுகிறார். ஆனால் அவர் கூட்டணியில் இணைந்துள்ள பாமக வாரிசு அரசியல் என விமர்சித்தார். எனவே இந்த கூட்டணி சந்தர்ப்ப வாத கூட்டணி என தெரிவித்தார். கூட்டணி தர்மத்தை அதிமுக மதிப்பதாகவும், ஆனால் அதனை மதிக்காமல் சந்தர்ப்பவாத கூட்டணியை வைத்து கொண்டு சிலர் செயல்படுவதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.