டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருக்கிறது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுமான ஆலைகளில் நடத்திய சோதனையை அடுத்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருக்கிறது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுமான ஆலைகளில் 3 நாட்கள் நடத்திய சோதனையை அடுத்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. மதுபான கொள்முதல் மற்றும் விற்பனையில் மாபெரும் முறைகேடு நடந்திருப்பது குறித்து அமலாக்கத்துறை விளக்கியுள்ளது.

மதுபானம் கொள்முதல் மூலம் தனியார் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன. உரிய ஆவணங்கள் இல்லாத நிறுவனங்களுக்கு டெண்டர் ஒப்பந்தங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முறையான KYC, ஜிஎஸ்டி மற்றும் PAN விவரங்களைக் குறிப்பிடாத விண்ணப்பதாரர்களுக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கும் மதுபான நிறுவனங்களுக்கும் இடையே நேரடித் தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. அதிக கொள்முதல், நிலுவையின்றி பணம் பெறுவது ஆகியவை தொடர்பிலும் தகவல் தொடர்பு இருந்துள்ளது.

இந்திய ரூபாய் குறியீடு ₹க்கு குட்பை சொன்ன ஸ்டாலின்; 'ரூ'-வுக்கு பட்ஜெட்டில் அங்கீகாரம்- அசத்தும் தமிழக அரசு!!

கணக்கில் வராது ரூ.1000 கோடி:

டாஸ்மாக் உயர் அதிகாரிகளுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு ஒப்பந்தம் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுபான நிறுவனங்கள் சட்டவிரோத பரிவர்த்தனைகளில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது.

டாஸ்மாக் போக்குவரத்து ஒப்பந்ததிலும் முறைகேடு நடந்திருக்கிறது. பார் உரிமம் வழங்குவதிலும் அதற்கான ஒப்பந்தங்கள் வழங்குவதிலும் தவறு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுபானங்களை ஒரு பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை அதிக விலை வைத்து விற்பனை செய்ததற்கான ஆதாரங்களையும் அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது.

அமலாக்கத்துறை இதுவரை நடத்தியிருக்கும் சோதனையில் சுமார் ரூ.1000 கோடி பணம் கணக்கில் வராதது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதிக கொள்முதல் செய்தால் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு ஆலைகள் கமிஷன் கொடுத்தது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்றுள்ளது. டாஸ்மாக் பணியாளர்கள் இடமாற்றத்திற்காகவும் அதிகாரிகள் லஞ்சம் பெற்றது தொடர்பான புகாரிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

திட்டமிட்டு செலவுகளை அதிகப்படுத்தியும் விற்பனை புள்ளிவிவரங்களை உயர்த்தியும் முறைகேடு நடந்துள்ளது. இந்த ஊழலில் மதுமான நிறுவனங்கள் மற்றும் பிற கூட்டாளிகளின் பங்கு பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.

அமலாக்கத்துறை ரெய்டு... மவுனம் கலைத்த உதயநிதி! அண்ணாமலை கருத்துக்கு பதிலடி!