"எல்லாருக்கும் எல்லாம்" என்ற முழக்கம்.. தமிழகம் முழுவதும் நடக்கும் திமுகவின் பொதுக்கூட்டங்கள் - ஒரு பார்வை!
DMK Ellarukum Ellam : முதல்வர் ஸ்டாலின் அவர்களுடைய 71வது பிறந்தநாள் கடந்த மார்ச் 1ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், மார்ச் 2ம் தேதி முதல் "எல்லோருக்கும் எல்லாம்" என்ற முழக்கத்தோடு பொது கூட்டங்களை நடத்த திமுக முடிவு செய்தது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று மார்ச் 2ம் தேதி துவங்கி நாளை மார்ச் நான்காம் தேதி வரை "எல்லாருக்கும் எல்லாம்" என்ற முழக்கத்துடன் பொதுக்கூட்டங்களை நடத்த அழைப்பு விடுத்தது திமுக. இது குறித்து திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த மார்ச் 1ம் தேதி, கழக உறுப்பினர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
ஐஹில் மார்ச் 1ம் தேதி அன்று நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் கழகத் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது 71வது அகவையில் அடி எடுத்து வைக்கிறார். 50 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்க்கையில் நம் தலைவர் கழகத்தை ஆறாவது முறையாக ஆட்சி பொறுப்பில் அமர வைத்து நமக்கு பெருமை பெற்று தந்துள்ளார்.
தந்தை பெரியார் அவர்களின் சமூக நீதியையும், அண்ணா அவர்களின் மாநில சுயாட்சி கொள்கைகளையும், தலைவர் கலைஞர் அவர்களுடைய சமூக நல திட்டங்களையும் மனதில் தாங்கி இந்த அருமையான திராவிட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் நமது முதல்வர் ஸ்டாலின் அவர்கள். இதன்படி சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக கட்சியினர் "எல்லாருக்கும் எல்லாம்" என்கின்ற தலைப்பில் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நேற்றும் மார்ச் 2ம் தேதி துவங்கிய இந்த நிகழ்வுகள் நாளை மார்ச் 4ம் தேதி நிறைவு பெறவுள்ளது. திருச்சி, தஞ்சாவூர், மதுரை, கோவை என்று தமிழகம் முழுவதும் இந்த பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றது. வருகின்ற மக்களவை தேர்தலுக்கான ஒரு முக்கிய முன்னெடுப்பாகும் இது பார்க்கப்படுகிறது.