தருமபுரி

உயர்த்தப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர் தினக் கூலியை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) சார்பில் தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) சார்பில் தருமபுரி மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் ரகுபதி தலைமை வகித்தார். பொருளாளர் ஜீவா உள்ளிட்ட கோட்ட நிர்வாகிகளும், ஓய்வுபெற்ற மின்வாரியத் தொழிலாளர் நலச் சங்கத்தின் தலைவர் சுந்தரமூர்த்தி, செயலர் விஜயன் உள்ளிட்டோரும் பேசினர்.

இதில், "ஒப்பந்தத் தொழிலாளர்களின் தினக்கூலியை ரூ. 250 இல் இருந்து ரூ. 380 ஆக உயர்த்தி வழங்க மின்வாரியம் எடுத்துள்ள முடிவை ஒப்பந்ததாரர்களிடம் வலியுறுத்தி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்ட கோரிக்கை மனுவும் மேற்பார்வைப் பொறியாளர் கணபதிராவிடம் வழங்கப்பட்டது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.