குழந்தை கெஞ்சியும் பிடிவாதம்... 300 அடி கோபுரத்தில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை..!

https://static.asianetnews.com/images/authors/5375b41b-c303-5568-beda-e699e57b9beb.jpg
First Published 9, Feb 2019, 10:58 AM IST
electric tower...jump suicide
Highlights

ஆரணி அருகே மனைவி, குழந்தைகள் கண்முன்னே 300 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆரணி அருகே மனைவி, குழந்தைகள் கண்முன்னே 300 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை மாவட்டம் நெல்வாய்பாளையம் அருகே உள்ள ஏந்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(35). சென்னையில் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கீதா(32), மகள் கிரிஜா(7), மகன் ஆர்யா(5). கடந்த 3ம் தேதி குடும்பத்தினரை பார்க்க ரமேஷ் சொந்த கிராமத்திற்கு வந்தார். மனை கீதாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த அவர், மீண்டும் சென்னைக்கு செல்லாமல் கிராமத்திலேயே இருந்து வந்தார். நேற்று அதிகாலை 5 மணியளவில் மனைவி கீதாவிடம்  ரமேஷ் தகராறு செய்து வீட்டை விட்டு வெளியேறினார். 

இதில் ரமேஷ் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை ஆரணி அருகே உள்ள நெல்வாய்பாளையம் கிராமத்தில் நிலத்தில் அமைக்கப்பட்டு வருகிற உயர் மின்கோபுரத்துக்கு வந்தார். பின்னர் அவர் சுமார் 300 அடி உயரமுள்ள அந்த மின்கோபுரத்தில் ஏறி, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக தான் வைத்திருந்த செல்போன் மூலம் உறவினர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் தகவல் அளித்துவிட்டு மின்கோபுரத்தின் மேல் ஏறினார். 

இதனையடுத்து போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் ரமேஷின் பெற்றோர் மற்றும் மனைவி, குழந்தைகள் என அனைவரும் அங்கு விரைந்து வந்தனர். 108 ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது. பின்னர் ரமேஷை செல்போனில் தொடர்பு கொண்டு கீழே இறங்கி வரும் படி குழந்தைகள் கதறினர். ஆனால் இவர் இறங்க மறுத்துவிட்டார். பல்வேறு தரப்பில் இருந்து பேச்சுவாரத்தை நடத்தியும் அவர் உடன்படவில்லை. 

சுமார் 5 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால் மேலே இருந்து ரமேஷ் திடீரென கீழே குதித்தார். அப்போது அவரை மீட்பதற்காக கீழே வலை விரித்திருந்தனர். ஆனால் அவர் கீழே விழும்போது இடையில் அவருடைய சட்டை மின்கோபுரத்தின் ஒரு கம்பியில் சிக்கிக் கொண்டது. சிறிது நேரம் அந்தரத்தில் தவித்தார். பிறகு பாரம் தாங்காமல் சட்டை கிழிந்து தலைகீழாக அவர் விழுந்ததில், தலை மின்கோபுர கம்பியில் அடிபட்டு மூளை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். 

loader