டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சாமிநாத புரத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தில் எம்.பில் நவீன வரலாறு படித்து வந்தார்.

இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தகவலறிந்து வந்த டெல்லி போலீசார் முத்துகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரோகித் வேமூலா மரணத்திற்கு நீதி விசாரணை அமைக்ககோரி போராடியவர்களில் முத்துகிருஷ்ணனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜே.என்.யூ பல்கலைக்கழக வளாகமே பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.