2026 தேர்தலை முன்னிட்டு அதிமுகவில் அமைப்பு ரீதியான பணிகளை மேற்கொள்ள 82 மாவட்டப் பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

2026 தேர்தலை முன்னிட்டு அதிமுகவில் அமைப்பு ரீதியான பணிகளை மேற்கொள்ள 82 மாவட்டப் பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியலில் அதிமுக மூத்த தலைவர் ஏ. கே. செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை.

அண்மையில், எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் செங்கோட்டையன் கலந்துகொள்ளவிலை. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தன்னை வளர்த்து ஆளாக்கிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லை என்பதால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று கூறினார். இதன் மூலம் அவர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சிக்கிறார் எனப் பேசப்பட்டது.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் விடுபட்டிருக்கிறது. இதன் மூலம் அதிமுகவில் வெடித்துள்ள புதிய உட்கட்சிப் பூசல் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

ஆனால், மாவட்ட பொறுப்பாளருக்குப் பதிலாக வேறு முக்கியப் பொறுப்பு செங்கோட்டையனுக்கு வழங்கப்படலாம் என்று அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.