Asianet News TamilAsianet News Tamil

ஜெயலலிதா பாணியில் முதல்வர் எடப்பாடி அதிரடி - நோன்பு கஞ்சிக்கு 4,900 மெட்ரிக் டன் இலவச அரிசி!!

edappadi announced free rice for ramzan fasting
edappadi announced free rice for ramzan fasting
Author
First Published May 24, 2017, 12:20 PM IST


இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு 4,900 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த அதிமுக ஆட்சியில், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க  பள்ளிவாசல்களுக்கு, தமிழக அரசு சார்பில் அரிசி வழங்க வேண்டும் என இஸ்லாமிய மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன.

edappadi announced free rice for ramzan fasting

அதைனை ஏற்று, கொண்ட ஜெயலலிதா, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி வாசல்களுக்கும் 4,600 மெட்ரிக் டன் அரிசி வழங்க உத்தரவிட்டார். அவரது உத்தரவு, வரும் காலங்களிலும் செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதை தொடர்ந்து, அதன்படி, கடந்த ஆண்டு வரை 4,600 மெட்ரிக் டன் வரை வழங்கப்பட்ட அரசி, தமிழகம் முழுவதும் 3000 பள்ளிவாசல்களுக்கு இந்தாண்டு 4,900 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios