edappadi announced 3 lakhs for died victims

தமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கி வந்தார்.

அதைதொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு விபத்துக்களில் இறந்தவர்களுக்கு தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமியும் நிதியுதவி வழங்கி வருகிறார். அதன்படி இன்று மிசாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கான நிதியுதவியை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அரசானையில், தமிழகத்தின் பல்வேறு நிகழ்வுகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

மேலும் அவர்கள் உயிரிழந்த சம்பவம் மிகவும் வருத்தத்தை அளிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.