இன்று சேலம் மாவட்டத்தில், அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இன்று சேலம் மாவட்டத்தில், அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.சேலம் அனுப்பூர் ஊராட்சியில் 30 லட்சம் மதிப்பிலான பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.

 உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தது மட்டுமில்லாமல், மக்கள் முன் தானும் உடற்பயிற்சி செய்து அனைவரையும் ஊக்கப்படுத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தன்னுடைய சொந்த ஊரான அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை திறந்த வைத்த முதல்வருக்கு மக்கள் தங்கள் நன்றியை தெரிவித்து கொண்டனர். இது ஒரு பக்கம் இருக்க, உடற்பயிற்சியையும் செய்து காண்பித்த முதல்வருக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் முதலவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் வெளியானதால், இதை பார்க்கும் நெட்டிசன்கள், ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் கேரண்டி என விமர்சனம் செய்து வருகின்றனர்.