எடப்பாடி பழனிசாமி சென்ற காரின் வேகத்துக்கு ஈடுக்கொடுத்து நாய் ஒன்று துரத்தும் காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி சென்ற காரின் வேகத்துக்கு ஈடுக்கொடுத்து நாய் ஒன்று துரத்தும் காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரி சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம்... அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!!
இந்த தீர்ப்பு குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை முடக்க நினைத்த சில எட்டப்பர்கள் திமுகவின் பி டீம் ஆக இருந்து செயல்பட்டவர்கள் முகத்திரை எல்லாம் இன்று கிழிக்கப்பட்டிருக்கின்றன. ஆறு, ஏழு மாதங்களாக அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பட்ட துன்பமும் வேதனையும் எண்ணில் அடங்காதவை. அதிமுகவுக்கு இனி எதிர்காலமே இல்லை என்றெல்லாம் குரல் எழுப்பினார்கள் எதிர்க்கட்சிகள்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமியின் 50 ஆண்டுகால அரசியல் பயணம்; ஜெயலலிதாவைப் போன்று சாதிப்பாரா?
இதற்கெல்லாம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒரு முடிவு கட்டிவிட்டது என்றார். இந்த நிலையில் மதுரையில் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாடு செய்திருந்த திருமண நிகழ்வில் கலந்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி காரில் சென்றார். அப்போது அவர் சென்ற காரை நாய் ஒன்று துரத்தி சென்றது. காரின் வேகத்துக்கு இணையாக அந்த நாயும் ஓடியது அனைவரயும் வியப்பில் ஆழ்த்தியது.
