அமைச்சர் கே.என்.நேரு குடும்பத்தினரின் வீடு, நிறுவன‌ங்களில் நடந்த சோதனை குறித்து அமலாக்கத்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

ED released statement raids conducted at K.N. Nehru's family: தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சராக உள்ளவர் கே.என்.நேரு. சில நாட்களுக்கு முன்பு சென்னையில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவியின் TVH குழும கட்டுமான நிறுவனத்தில் 10க்கும் இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் அடையாறு, பெசன்ட் நகர், எம் ஆர் சி நகர், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, சிஐடி காலனி உள்ளிட்ட 10 இடங்களில் தீவிர சோதனை நடைபெற்றது. 

அமலாக்கத்துறை சோதனை 

இதுமட்டுமின்றி கோவை உள்ளிட்ட பல இடங்களில் செயல்படும் TVH கட்டுமான நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் வீடுகளிலும் சோதனை நடந்தது. மேலும் திருச்சி தில்லை நகரில் உளள அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டிலும் பலமணி நேரம் சோதனை நடைபெற்றது. கே.என்.நேருவின் வங்கிக்கணக்கில் ஏராளமான பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறி அமலாக்கத் துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது மட்டுமின்றி அமைச்சர் கே.என்.நேரு மகனும், பெரம்பலூர் தி.மு.க., எம்.பி.,யுமான அருண் நேரு வீட்டிலும் சோதனை செய்யப்பட்டது. 

திமுக குற்றச்சாட்டு

இந்த சோதனை முடிந்தபிறகு கே.என்.நேருவின் சகோதாரர் ரவியை காரில் அழைத்துச் சென்ற அமலாக்கத்துறையினர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினார்கள். எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் இந்த சோதனை நடந்துள்ளதாக திமுக தரப்பில் இருந்து குற்றம்சாட்டப்பட்டது. 

அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! பாராட்டிய கையோடு உறுதிப்படுத்திய அமித்ஷா!

முக்கிய ஆவணங்கள் என்னென்ன?

இந்நிலையில், இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தற்போது தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அமலாக்கத்துறை வெளியிட்ட பதிவில், ''சென்னை அமலாக்கத் துறை, சென்னை, திருச்சி மற்றும் கோயம்புத்தூரில் 07/04/2025 அன்று PMLA, 2002 இன் விதிகளின் கீழ், M/s Truedom EPC India Pvt Ltd மற்றும் அதன் முக்கிய பணியாளர்களுடன் தொடர்புடைய 15 இடங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. சோதனை நடவடிக்கைகளின் போது, ​​பல்வேறு குற்றவியல் ஆவணங்கள், டிஜிட்டல் பதிவுகள் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன'' என்று தெரிவித்துள்ளது.

100 கோடி ரூபாய்

அமலாக்கத்துறை அறிவிப்பில் கே.என்.நேரு பெயரையோ, அவரது குடும்பத்தினர் பெயரையோ குறிப்பிடவில்லை. ஆனால் TVH குழும நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. TVH அலுவலகத்தில் கடந்த 2018ஆம் ஆண்டும் வருமானத்துறை சோதனை நடந்த நிலையில், கணக்கில் வராத 100 கோடி ரூபாய் பணம் மற்றும் 90 சவரன் நகை கைப்பற்றப்பட்டு இருந்தது.

கூட்டணி உறுதியான குஷியில் அமித்ஷா, அண்ணாமலைக்கு விருந்து அளித்த இபிஎஸ்!