அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! பாராட்டிய கையோடு உறுதிப்படுத்திய அமித்ஷா!
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு வழங்கப்படும் என்று அமித்ஷா உறுதி அளித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை அளித்த பங்களிப்பு பாராட்டத்தக்கது என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

Amit Shah speaking about Annamalai: தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக, பாஜக கூட்டணி மீண்டும் மலர்ந்துள்ளது. இந்த கூட்டணியில் சேர அண்ணாமலையை மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அகற்ற வேண்டும் என அதிமுக நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலை மாநில தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு நயினர் நாகேந்திரன் தலைவராக நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகின.
Annamalai BJP
இதற்கிடையே தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவர்கள், இன்று (ஏப்ரல் 11) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 வரை விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தமிழக மாநில தலைவர் பதவிக்கு இன்று நடைபெற்ற விருப்ப மனு தாக்கலின்போது நயினார் நாகேந்திரன் மட்டும் தாக்கல் செய்துள்ளார். அவரை தவிர வேறு யாரும் விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை.
இதனால் நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக மாநிலத் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார். சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை (ஏப்ரல் 12) நடைபெற உள்ள விழாவில் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராக பொறுப்பேற்க உள்ளதால் 4 ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருந்த அண்ணாமலை விடுவிக்கப்பட்டுள்ளார்.
Nainar Nagendran: தமிழக பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்! நாளை ஒருமனதாக தேர்வு!
Union Home Minister Amit Shah
இதனால் அண்ணாமலை அடுத்து என்ன செய்ய போகிறார்? அவருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், அண்ணாமலைக்கு தேசிய அளவில் பெரிய பொறுப்பு வழங்கபட உள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். அதிமுக, பாஜக கூட்டணியை உறுதி செய்வதற்கு முன்பு எக்ஸ் தளத்தில் இதை அவர் கூறியுள்ளார்.
Annamalai, Amit shah
இது தொடர்பாக பதிவிட்ட அவர், ''தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை அளித்த பங்களிப்பு பாராட்டத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, அல்லது கட்சியின் திட்டங்களை கிராமம் கிராமமாக கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, அண்ணாமலை ஜியின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. அண்ணாமலை தேசிய பொறுப்புக்கு செல்கிறார். பாஜகவின் தேசிய பணிகளுக்கு அண்ணாமலையின் திறமை பயன்படுத்தப்படும்'' என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சுமார் 4 ஆண்டுகள் பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, மாநிலத்தில் பாஜக வளர முக்கிய காரணமாக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
5 பேரை தாண்டி நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராவது எப்படி? பின்னணி காரணம் இதுதான்!