மின் நுகர்வோர் இனி மின் கட்டணம் செலுத்த மின் வாரிய அலுகத்துக்கு செல்லாமல் செல் போன் மூலம் கட்டும் புதிய முறையை அமைச்சர் தங்கமணி அறிமுகம் செய்து வைத்தார்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2.7 கோடி மின் நுகர்வோர்கள் உள்ளனர். இவர்கள் தங்களுடைய மின்கட்டணத்தை கணினி மயமாக்கப்பட்ட வங்கிகள், தபால் நிலையங்கள், அரசு இ-சேவை மையங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் செலுத்தி வருகின்றனர். தற்போது புதிதாக செல்போன் ‘ஆப்’ மூலம் மின்கட்டணம் செலுத்தும் முறை முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

இத்திட்டத்தை அறிமுகம் செய்து வைத்த அமைச்சர் தங்கமணி செல்போனில் கூகுள் பிளே-ஸ்டோருக்கு சென்று tangedco app, என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்றும்,  இதன்மூலம் மின்கட்டணம் செலுத்தலாம்என்றும் தெரிவித்தார். மின் கட்டணம் செலுத்தப்பட்டது உடனடியாக  எஸ்.எம்.எஸ். மூலம் உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது மின் வாரியத்தில் ஏற்பட்டு வரும் மின் இழப்பு விரைவில் சரி செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தால் 24 மணி நேரத்தில் இணைப்பு கொடுக்கும் திட்டம் கடந்த 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இத்திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தங்கமணி கூறினார்.

கடந்த 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் இந்த புதிய முறை மூலம் 5171 இணைப்புகள்  கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.