KN Nehru House Raid : திருச்சி தில்லை நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருச்சி, தில்லை நகரில் இருக்கிற முன்னாள் அமைச்சர் கே.என். நேருவோட வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 5) காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை நடந்துகிட்டு இருந்தப்போ, நேருவோட வீட்டுக்கு வெளியே திமுக தொண்டர்கள் பெருந்திரளாக கூடிட்டாங்க. சோதனை நடந்த சமயத்துல, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் நேரு வீட்டுக்கு வந்து அவரை சந்தித்துள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அமைச்சராக நேரு இருந்தப்போ, ஆள் சேர்ப்பு, ஒப்பந்தங்கள் மற்றும் இடமாற்றங்கள்ல முறைகேடுகள் நடந்ததா எழுந்த புகார்கள் தொடர்பாகதான் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கு. சென்னை உயர் நீதிமன்றம் இதுபற்றி விசாரிக்க DVAC-க்கு உத்தரவிட்டதை அடுத்து, இந்த FIR பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குல நேரு, அவரோட உறவினர்கள், சில அதிகாரிகள் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கு.
திடீர் சோதனைக்கு காரணம் என்ன?
இந்த புகார்கள்ல முக்கியமானது, அரசு வேலை வாங்கித் தர்றதா சொல்லி சுமார் 888 கோடி ரூபாய் வரைக்கும் பணம் வசூலித்த மோசடி. இதுமட்டுமில்லாம, சுமார் 1,020 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள்ல நடந்த முறைகேடுகள், சட்டவிரோத இடமாற்றங்கள் மற்றும் பதவிகள் வழங்கியது தொடர்பாகவும் குற்றச்சாட்டுகள் இருக்கு. இந்த முறைகேடுகள் தொடர்பான விவரங்களை அமலாக்கத்துறை (ED) ஏற்கெனவே மாநில அரசு அதிகாரிகளுடன் பகிர்ந்துகிட்டது. அதன்பிறகுதான் இந்த விஷயம் தீவிரமா விசாரிக்கப்பட்டது.
ஆனாலும், இந்த வழக்குல குற்றம் சாட்டப்பட்டவங்களுக்கு எதிரா மேற்கொண்டு லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதிச்சிருக்கு. வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்துட்டு இருக்கு. திருச்சி மட்டுமின்றி சென்னை அடையார், திருவான்மியூர் உள்பட முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்கு சொந்தமான 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்குமா என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அமைச்சர் கே.என். நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்!


