Asianet News TamilAsianet News Tamil

தண்ணீர் காலியாகமல் இருக்க தெர்மாகோல் கொண்டு மூடிடுவோம்- செல்லூர் ராஜூவை கிண்டல் செய்த துரைமுருகன்

அணைகளில் தண்ணீர் வீணாகாமல் இருக்க தெர்மாகோல் கொண்டு மூடி வைத்துள்ளதாக சட்டப்பேரவையில் துரைமுருகன் கூறியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

Duraimurugan said that the water is covered with thermocol to avoid wastage KAK
Author
First Published Oct 9, 2023, 11:42 AM IST

சுத்தமான குடிநீர் வேண்டும்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தில் முதலாவதாக வினாக்கள் விடைகள் நேரம் நடைபெற்றது. அப்போது மதுரை மாநகருக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்றும், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜூ கோரிக்கை வைத்தார். மேலும் மதுரை மாநகரில் சாக்கடை நீரும் குடிநீருடன் கலந்து வரக்கூடிய நிலையில் அரசு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். மேலும் குடிநீர் திட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் குடிநீர் தொட்டி இன்னும் அமைக்கப்படவில்லை தெரிவித்தார். மேலும் 24 மணி நேரமும் மதுரை மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும் படி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

Duraimurugan said that the water is covered with thermocol to avoid wastage KAK

விரைவில் பணிகள் முடிக்கப்படும்

இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கம்பத்தில் இருந்து மதுரைக்கு நீர் கொண்டு செல்லும் பணியை அதிமுக ஆரம்பித்தாலும் கிணறு தோண்டும் அனுமதியை பெறாமல் இருந்ததாகவும், இதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், 160 எம்.எல்.டி தண்ணீர் கொண்டு வர பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.  கடந்த ஆட்சியில் 60 கிலோ மீட்டருக்கு பைப் லைன் போடாமல் விட்ட நிலையில் தற்போது அந்த பணிகள் தொடங்கப்பட்டு இன்னும் 15 கிலோ மீட்டர் மட்டுமே பைப் லைன் போட வேண்டிய பணிகள் உள்ளதால் அந்த பணிகளும் விரைவில் நிறைவு பெற்று முதலமைச்சர் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பார் எனவும் கூறினார். மேலும் வைகை அணை ஒரத்தில் 4 மேல் நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

Duraimurugan said that the water is covered with thermocol to avoid wastage KAK

தெர்மாகோல் கொண்டு மூடி வைத்துள்ளோம்

அப்போது குறுக்கீட்டு பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,  நிச்சயமாக தண்ணீர் கிடைக்கும் என்றும், அணையில் உள்ள தண்ணீர்  காலியாகாமல் இருக்க அணை இல்லை, தெர்மாகோல் கொண்டு மூடி வைத்துள்ளோம் எனவே கவலைப்பட வேண்டாம் என கூறினார். இதன் காரணமாக சட்டப்பேரவையில்  அவையில் சிரிப்பலை எழுந்தது

Follow Us:
Download App:
  • android
  • ios