Tamilnadu Weatherman Alert : சென்னையை வெளுத்து வாங்க போகுது மழை... உஷாரா இருங்க.. எச்சரிக்கை விடுத்த வெதர்மேன்
வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் சென்னை அருகே நகர்ந்த செல்வதால் இன்று இரவு முதல் நாளை வரை கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் இந்த புயலால் 200 மி.மீட்டர் அளவிற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பாதகவும் கூறியுள்ளார்.
வங்ககடலில் புயல்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 முற்பகல் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் நகர்ந்து 05-12-2023 மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னைக்கு கன மழை எச்சரிக்கை
இந்த மிக்ஜம் புயலின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் வரை பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே புயல் பாதிப்பு தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், மிக்ஜம் புயல் சென்னைக்கு மிக அருகில் வரும் நிலையில் அடத்தியான மேகங்கள் காஞ்சிபுரம், சென்னை, செங்கல் பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நிலவக்கூடும். இதனால் இன்று இரவு முதல் நாளை வரை ஒரு நாள் முழுக்க கன மழைக்கு வாய்ப்புள்ளது. கனமழை தொடர்பாக மிகவும் அரிதாகவே இதுபோன்ற தீவிர எச்சரிக்கைகளை கூறுவேன்.
2 நாட்களுக்கு தொடர் கன மழை
இந்த புயலுக்கு முன்னதாக 2015 ஆம் ஆண்டு நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளிலும், 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 1மற்றும் 2 தேதியும் எச்சரிக்கை விடுத்தேன். 2015, 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 11-12 ஆகிய தேதிகளுக்கும் அலர்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டுகளை தொடர்ந்து தற்போது டிசம்பர் 3-4 ஆகிய நாட்கள் எச்சரிக்கை விடுக்கிறேன். எனவே இந்த மாவட்டங்களில் 200 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்