due to bus strike people suffered a lot in tamilnadu
சென்னையில் போக்குவரத்துதுறை அமைச்சர் உடனான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளதால், தமிழகம் முழுவதும் திடீரென அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டு உள்ளது
சென்னை மதுரை, கடலூர், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் திடீரென போக்குவரத்து நிறுத்தப் பட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்
2.57% ஊதிய உயர்வை தொழிற்சங்கங்கள் கேட்ட நிலையில் 2.40% மட்டுமே அரசு தருவதாக ஒப்புக் கொண்டு உள்ளது.
இதனை ஏற்க மறுக்கும் போக்குவரத்து தொழிற்சங்கம் தற்போது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
சென்னை முழுவதும் எந்த ஒரு அரசு பேருந்தும் இயங்க வில்லை ...அதற்கு அடுத்த படியாக தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.
பயணிகள் பாதிப்பு
இதன் காரணமாக மக்கள் பயணம் செய்ய முடியாமல் ஆங்காங்கு தவித்து வருகின்றனர்.
குழந்தைகள்,பெரியவர்கள் என அனைவரும் நடு ரோட்டில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
ஆங்காங்கு பல பேருந்துகள் ஓடும் வழியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது. மற்ற பேருந்துகள் காலியாக பணிமனைக்கு திருப்பப்பட்டு உள்ளது.
மாணவர்கள், அலுவலகம் சென்றோர் பெரும் அவஸ்தை...
பள்ளி கல்லூரி சென்ற மாணவர்கள் முதல் அலுவலகம் சென்று வீடு திரும்ப முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர்.
இன்னும் சொல்லப்போனால் சென்னை முழுக்க ஸ்தம்பித்து உள்ளது. பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டால் தான் இதற்கு ஒரு முடிவு கிடைக்கும் என தொழிலாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளனர்
