MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை மக்களே! இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவையில் அதிரடி மாற்றம்.. இதோ முழு விவரம்

சென்னை மக்களே! இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவையில் அதிரடி மாற்றம்.. இதோ முழு விவரம்

Electric Train: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக புறநகர் ரயில் இயக்கத்தில் இன்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக மாற்றம்.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 20 2026, 12:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி
Image Credit : our own

எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி

சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மின்சார ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. அவ்வப்போது பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக புறநகர் ரயில் இயக்கத்தில் இன்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தெற்கு ரயில்வே
Image Credit : southern railway

தெற்கு ரயில்வே

இதுதொடர்பாக சென்னை கோட்டம் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, வழக்கம் போல் 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் (புறநகர் நடைமேடைகள்) கையாளப்படும் புறநகர் ரயில்கள் 2026 இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 5 நள்ளிரவு 23:59 மணி வரை (45 நாட்களுக்கு) 5 மற்றும் 6-வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்பட உள்ளன.

Related Articles

Related image1
சனிக்கிழமை காத்திருக்கும் அதிர்ச்சி! தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை! எத்தனை மணிநேரம்?
Related image2
45 நாட்கள் மின்சார ரயில்கள் கட்.. கைகொடுக்க வரும் சிறப்பு பேருந்துகள்.. சென்னைவாசிகள் கவனத்துக்கு..!
35
மின்சார ரயில் மேடை மாற்றம்
Image Credit : our own

மின்சார ரயில் மேடை மாற்றம்

சென்னை கடற்கரை தாம்பரம்/செங்கல்பட்டு/காஞ்சிபுரம்/அரக்கோணம் பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 5 வரை, அனைத்து மின்சார (EMU) ரயில்களும் சென்னை எழும்பூரில் 6-வது நடைமேடையான விரைவுப் பாதையில் இயக்கப்படும்.

அரக்கோணம்/காஞ்சிபுரம்/செங்கல்பட்டு/தாம்பரம் சென்னை கடற்கரை மறுமார்க்கத்தில் வரும் அனைத்து மின்சார ரயில்களும் இதே காலகட்டத்தில் சென்னை எழும்பூரில் 5-வது நடைமேடையான விரைவுப் பாதை இயக்கப்படும்.

45
ரயில் எண்கள் மற்றும் நேர மாற்றம்
Image Credit : our own

ரயில் எண்கள் மற்றும் நேர மாற்றம்

இந்தக் காலகட்டத்தில் (2026 பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 5 வரை), சென்னை கடற்கரை - தாம்பரம் / செங்கல்பட்டு/ காஞ்சிபுரம்/ அரக்கோணம் மார்க்கத்தில் தற்போதுள்ள மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, புதிய மின்சார வண்டி எண்களுடன் திருத்தப்பட்ட நேரங்களில் இயக்கப்படும். இந்த தற்காலிக நேர அட்டவணை இணைப்பு A-வில் (Annexure - A) கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த 45 நாட்களில் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் தனி ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணை கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

55
சிறப்பு பேருந்துகள்
Image Credit : our own

சிறப்பு பேருந்துகள்

சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம், கிளாம்பாக்கம் வழியாக கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் தடம் எண். E18-ல் 16 பேருந்துகளும், கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் தடம் எண்.18A-ல் 28 பேருந்துகள் என 44 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக இராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து 35 பேருந்துகள் கிளாம்பாக்கம் வரையும், பல்லாவரத்திலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை 15 பேருந்துகள் என மொத்தம் 50 பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை
ரயில்
தென்னக இரயில்வே
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tomorrow Power Cut: நாளைக்கு பவர் கட்..உங்க ஊர் பெயர் இருக்கா? முழு லிஸ்ட்டையும் செக் பண்ணுங்க!
Recommended image2
Investment: லண்டனில் முதல்வர் விஜய்... ஆட்டோமொபைல், க்ரீன் எனர்ஜியில் குவியும் முதலீடுகள்!
Recommended image3
Digital Driving Licence: லைசென்ஸ் இனி கையில் வராது! இன்று முதல் டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ் அறிமுகம்
Related Stories
Recommended image1
சனிக்கிழமை காத்திருக்கும் அதிர்ச்சி! தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை! எத்தனை மணிநேரம்?
Recommended image2
45 நாட்கள் மின்சார ரயில்கள் கட்.. கைகொடுக்க வரும் சிறப்பு பேருந்துகள்.. சென்னைவாசிகள் கவனத்துக்கு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved