மதுரை 

கார் வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்ற பெண் மீது மோதிவிடக் கூடாது என்று பிரேக் அடித்த காரின் மீது பின்னால் வந்த கார் மோதியது. இதில், முதலில் பிரேக் அடித்த கார் உருண்டு சென்று தலைக்குப்புற கவிழ்ந்தது. பலத்த காயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

madurai name க்கான பட முடிவு

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், தோப்பூரைச் சேர்ந்த ஒச்சம்மாள் (40) நேற்று காலை இதேப் பகுதியில் உள்ள நான்கு வழிச் சாலையை கடக்க முயன்றார். 

அப்போது அந்த வழியாக கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி கார் ஒன்று  மின்னல் வேகத்தில் வந்துக் கொண்டிருந்தது. அப்போது வேகமாக வந்த காரை கவனிக்காமல் ஒச்சம்மாள் சாலையை கடக்க முற்பட்டார். 

கார் கவிழ்ந்து க்கான பட முடிவு

இதனைக் கண்ட கார் ஓட்டுநர், சாலையைக் கடக்கும் பெண் மீது மோதிவிடக் கூடாது என்று எண்ணி உடனே பிரேக்கை அழுத்தி காரை நிறுத்தினார். ஆனால், திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரை, திருமங்கலம் நோக்கி வந்த மற்றொரு கார் ஒன்று பிரேக் அடித்தும் நிற்காமல் முதலில் நின்ற கார் மீது பலமாக மோதியது. 

இதில் அந்த கார் நிலைத் தடுமாறியது. உருண்டு சென்று தலைகுப்புற கவிழ்ந்த காரில் இருந்த ஓட்டுநர் ராஜசேகர் (30) பலத்த காயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இவ்விபத்தில் ஒச்சம்மாள் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கார் கவிழ்ந்து க்கான பட முடிவு

விபத்து குறித்து தகவலறிந்த ஆஸ்டின்பட்டி காவலாளர்கள் விரைந்து வந்து கவிழ்ந்த காரை அப்புறப்படுத்திவிட்டு போக்குவரத்தை சீர்படுத்தினர். விபத்து குறித்து வழக்குப் பதிந்த காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.