Asianet News TamilAsianet News Tamil

சூப்பர் அறிவிப்பு !! விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் இரு மடங்கு உயர்வு .. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு..

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் தற்போது இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3000-ல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 

Double hike in pension for sportspersons
Author
Tamil Nadu, First Published Aug 6, 2022, 12:08 PM IST

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் தற்போது இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3000-ல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு மானிய கோரிக்கை விவாதத்தின் போது,  விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் நலிந்த நிலையில் விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்பட்டு வரும், ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

அதன்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர், ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குவதற்கா பரிந்துரையை அரசுக்கு அனுப்பினார். இந்நிலையில் தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் அனுப்பிய பரிந்துரையை பரிசீலித்து, தற்போது நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படும் ஓய்வூதியத்தை இரண்டு மடங்காக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.’’

மேலும் படிக்க:தேர்வர்களே அலர்ட்!! தவறவிடாதீர்கள்.. குரூப் 1 மற்றும் 2 தேர்விற்கு இலவச பயிற்சி முகாம்.. முழு விவரம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு வழங்கி வரும் ஓய்வூதிய தொகையை ரூ.3000 யிலிருந்து ரூ.6000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களின் சாதனையை அங்கீகரித்து தமிழக அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios