அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதன் அதிகாலை 4 மணிக்கு அறுவை சிகிச்சை நடைபெறும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமலாக்கத்துறை சோதனையின்போது உடல்நலக்குறைவுக்கு ஆளான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு இதயத்தில் அடைப்பை சரிசெய்வதற்கான பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்படிருக்கும் நிலையில், மாநில மனித உரிமைகள் ஆணையம் அமலாக்கத்துறையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. செந்தில் பாலாஜியின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
14:37 மணி நேர பயணத்தில் நியூயார்க் விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமர் மோடி!

கடந்த முறை அதிமுக ஆட்சியில் இருந்தபோது செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி முறைகேடு செய்ததாவும், அதில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை ஆக்ஷனில் இறங்கியது. இதன்படி செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜூன் 13ஆம் நள்ளிரவில் செந்தில் பாலாஜியைக் கைது செய்தனர்.
19 கப்பல்களால் உருவாகும் யோகா வளையம்! இந்திய கடற்படை சொல்லும் யோகா தின மெசேஜ்!

கைது என்றவுடன் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் முதலில் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், நீதிமன்ற அனுமதியுடன் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், மாநில மனித உரிமைகள் ஆணையம் அமலாக்கத்துறையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. செந்தில் பாலாஜியின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை இணை இயக்குநர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது குறித்து 6 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு என்றாலே செங்கோல் தான் நினைவுக்கும் வரும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
