14:37 மணி நேர பயணத்தில் நியூயார்க் விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமர் மோடி!

பிரதமருக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு விமானத்தில் செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்ட பிரதமர் மோடி, 14 மணிநேரம் 37 நிமிடங்களில் அமெரிக்காவைச் சென்றடைந்துள்ளார்.

PM Modi has touched down at New York JFK airport after a non stop 14 hours 37 minute flight from Delhi

பிரதமருக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு விமானத்தில் செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்ட பிரதமர் மோடி, 14 மணிநேரம் 37 நிமிடங்களில் அமெரிக்காவைச் சென்றடைந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை காலை அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணமாக புறப்பட்டார். இந்தப் பயணத்தில் பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர வர்த்தக உறவுகள் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். 

பிரதமர் மோடியின் முயற்சிக்கு பிறகு, தினை சார்ந்த உணவுகளை மெனுவில் சேர்த்த நியூயார்க் உணவகம்..

PM Modi has touched down at New York JFK airport after a non stop 14 hours 37 minute flight from Delhi

இந்தப் பயணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவது இது இரண்டாவது முறையாகும்; எந்த இந்தியப் பிரதமரும் இரண்டு முறை உரையாற்றவில்லை. உலகம் முழுவதும், மிகச் சிலரே அதைச் செய்திருக்கிறார்கள்..." என்று கூறியுள்ளார். வாஷிங்டன் டிசிக்கு செல்வதற்கு முன், பிரதமர் மோடி ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், அமெரிக்க அதிபரின் அழைப்பு, ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான கூட்டுறவின் வீரியத்தையும் உயிர்சக்தியையும் பிரதிபலிக்கிறது என்று கூறினார்.

மோடியின் வருகையை முன்னிட்டு கலிபோர்னியாவைச் சேர்ந்த பிரபல தாவர உணவு சமையல் கலைஞர் நினா கர்டிஸ் விருந்துக்கான மெனுவை வடிவமைத்துள்ளார். மாலையில் கிராமி விருது பெற்ற வயலின் கலைஞர் ஜோசுவா பெல் வழங்கும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு வயலின் இசையுடன் தடபுடலாக விருந்து! வெள்ளை மாளிகையில் களைகட்டும் ஏற்பாடுகள்!

PM Modi has touched down at New York JFK airport after a non stop 14 hours 37 minute flight from Delhi

மேரிலேண்டில் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடிக்கு இறங்குவார். அங்கு அவருக்கு விமானப்படை தளத்தில் அளிக்கப்படும் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படும். மூத்த அமெரிக்க அதிகாரிகளும் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிப்பார்கள். அமெரிக்காவின் அதிகாரபூர்வ விருந்தினர் மாளிகையான பிளேர் ஹவுசில் மோடி தங்குவார். இது உலகின் மிகவும் சிறப்பு வாய்ந்த ஹோட்டல் என்று பெயர் பெற்றது.

ஜூன் 22ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவியும் அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான ஜில் பைடன் இருவரும் இந்தியப் பிரதமர் மோடிக்கு, வெள்ளை மாளிகையில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கின்றனர். இந்த வரவேற்பு நிகழ்வில் சுமார் 2000 இந்திய அமெரிக்கர்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது. வரவேற்புக்குப் பின் இருநாடுகளின் தேசிய கீதங்களும் ஒலித்த பின் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தையைத் தொடங்குவார்கள்.

பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் அளிக்கப்படும் சிறப்பான வரவேற்புகள் என்னென்ன? முக்கியத்துவம் என்ன?

PM Modi has touched down at New York JFK airport after a non stop 14 hours 37 minute flight from Delhi

"பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பலரும் உணரவில்லை. சீனாவுக்கு நிகராக தொழில்துறை உற்பத்தித் திறன் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. குறிப்பாக, உலக வர்த்தக நிறுவனத்தின் விதிகளுக்கு உட்பட்டு செயல்படும் இந்தியா போன்ற கூட்டாளியின் நட்புதான் அமெரிக்காவுக்குத் தேவை" என்று ஜார்ஜியாவைச் சேர்ந்த அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ரிச்சர்ட் மெக்கார்மிக் கூறியுள்ளார்.

மோடி பிரதமரான பிறகு பல முறை அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார். ஆனால் அவை பெரும்பாலும் உத்தியோகபூர்வமான பயணங்களாக இருந்தன. இதற்கு முன் நவம்பர் 2009 இல் அப்போதைய இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றார். அப்போது அன்றைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் அவருக்கு  விருந்தளித்தார்.

இந்தியா அமைதியின் பக்கம் இருக்கிறது: அமெரிக்க பயணத்திற்கு முன்பு வால் ஸ்டிரீட் ஜர்னலுக்கு பிரதமர் மோடி பேட்டி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios