கடந்த மாதம் முதல் இதுவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 ரூபாயும், டீசல் 3.67 ரூபாயும் உயர்ந்திருக்கிறது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வாகும்.

கடந்த மாதத்துக்கு முன்பு வரை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம் இருமுறை மாற்றி அமைத்து வந்தன. அப்போது விலை உயர்வு வெளிப்படையாகத் தெரிந்து வந்தது. ஆனால், ஜூலை மாதம் முதல் சர்வதேச சந்தை விலை அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றம் செய்யப்படுகிறது.

அது பைசா கணக்கில் மாறுவதால் யாரும் பெரிதாக அதைக் கணக்கிட வாய்ப்பில்லாமல் போனது. இந்த நிலையில் ஒன்றரை மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது.

அதாவது, கடந்த மாதம் முதல் இதுவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 ரூபாயும், டீசல் 3.67 ரூபாயும் உயர்ந்திருக்கிறது