தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகர் விஜய் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளியைப் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் வித்யாஷ்ரம் என்ற பெயரில் இந்தப் பள்ளி இயங்குவதாகவும், எஸ்.ஏ. சந்திரசேகரின் அறக்கட்டளை பெயரில் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளியில் பற்றி யாருக்காவது தெரியுமா என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 'விஜய் வித்யாஷ்ரம்' என்ற பெயரில் சிபிஎஸ்இ பள்ளியை விஜய் நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

தமிழகத்தில் மும்மொழி கொள்கையை வைத்து அரசியல் செய்துவருகிறார்கள். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த இருமொழிக் கொள்கையை திமுக அரசு பின்பற்றுகிறது. புதிய கல்விக் கொள்கையில் இந்தியை ஒருபோதும் திணிக்கவில்லை. மும்மொழிக் கொள்கையில் இந்தி திணிக்கப்படாது.

தனியார் பள்ளிகளில் இருப்பதைப் போல பல மொழிகளைப் படிக்கும் வாய்ப்பு அரசு பள்ளிகளில் இல்லை. மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பல மொழிகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் 30 லட்சம் மாணவ மாணவிகள் மூன்று மொழிகளைப் படிக்கிறார்கள்.

காபி பிரியர்களுக்கு அதிர்ச்சி! ஒரு கிலோ காபி தூள் 1000 ரூபாய்க்கு மேல் உயர்கிறது!

நான் கூறுவதற்கு ஆதாரம் இல்லை என தமிழக அரசு கூறுவது வெட்கக்கேடானது. மும்மொழிக் கொள்கையில் அவர்களின் நிலைப்பாடு தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

நடிகர் விஜய் ஒரு சிபிஎஸ்இ பள்ளி நடத்துவது பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? 'விஜய் வித்யாஸ்ரம்' என்ற பெயரில் விஜய் சிபிஎஸ்இ பள்ளியை நடத்துகிறார். தன் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரின் பெயரில் உள்ள அறக்கட்டளையில் அந்தப் பள்ளி இயங்குகிறது.

2018இல் சீமான் இந்தி அல்லது பிற மொழிகளை விருப்ப மொழியாகப் பயிலலாம் என்று கூறினார். புதிய கல்விக்கொள்கையில் இந்தியைத் திணிக்கவே இல்லை. ஆனால், இந்தி திணிப்பு என்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நான் சவால் விடுகிறேன். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமனம் குறித்து அவர் கடிதம் எழுதுவாரா? அவர் அவ்வாறு கடிதம் எழுதினால் அன்றைய தினமே மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்தித்து அதுபற்றிப் பேசத் தயாராக இருக்கிறேன்.

மார்ச் 1ஆம் தேதி முதல் பாஜக சார்பில் புதிய கல்விக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். 3 மாதங்கள் வீடு வீடாகச் சென்று விவரங்களைச் சேகரிப்போம். மூன்றாவது மொழி வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்துவோம். அந்த விவரங்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைப்போம்."

இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

வலுவடையும் இந்தியா - கத்தார் வர்த்தக உறவு; கத்தார் அமீருடன் மோடி பேச்சுவார்த்தை!