PM Modi Talks With Qatar Amir: இந்தியாவும் கத்தாரும் செவ்வாய்க்கிழமை தங்கள் கூட்டுறவை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. வர்த்தகம், எரிசக்தி, முதலீடுகள், புதுமை, தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு, கலாச்சாரம் உள்ளிட்ட பல துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இந்தியாவும் கத்தாரும் செவ்வாய்க்கிழமை தங்கள் கூட்டுறவை வலுப்படுத்தும் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. வர்த்தகம், எரிசக்தி, முதலீடுகள், புதுமை, தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு, கலாச்சாரம் உள்ளிட்ட பல துறைகளில் கவனம் செலுத்தி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
டெல்லியில் உள்ள ஹைதராபாத் ஹவுஸில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
முன்னதாக, பிரதமர் மோடியும் கத்தார் அமீரும் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பதற்கும் வருமான வரிகள் தொடர்பான நிதி மோசடியைத் தடுப்பதற்கும் திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.
புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம்
"பிரதமர் மோடி மற்றும் கத்தார் அமீர் ஷேக் அல்-தானி இருவரும் இன்று ஹைதராபாத் ஹவுஸில் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். வர்த்தகம், எரிசக்தி, முதலீடுகள், புதுமை, தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு, கலாச்சாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி இந்தியா-கத்தார் கூட்டுறவை மேம்படுத்த இரு தலைவர்களும் முடிவு செய்தனர். பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்," என்று வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள கத்தார் அமீருக்கு, இன்று காலை ராஷ்டிரபதி பவனில் அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசின் மூத்த அமைச்சர்கள் வரவேற்றனர். கத்தார் அமீர் இந்திய அமைச்சர்களுன் கலந்துரையாடினார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் அமீருடன் வந்த கத்தார் தூதுக்குழுவினருடன் உரையாடினார்.
கத்தார் அமீருடன் அந்நாட்டின் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் வணிகத் தூதுக்குழுவினர் வருகை தந்துள்ளனர். இதற்கு முன்பு கத்தார் அமீர் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருந்தார்.
கத்தார் அமீரின் இந்தப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் பன்முகக் கூட்டுறவுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரலாற்று ரீதியாக இந்தியா - கத்தார் இடையே நிலவும் நெருக்கமான உறவுகள் பல்வேறு துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பு தொடரவும் வழிவகுக்கும் எனவும் கருதப்படுகிறது.
சீனா பற்றிய சர்ச்சை பேச்சு: சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு காங்கிரஸ் மறுப்பு
