அரசியல் சண்டைகளுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் என்று ஜெயலலிதா மணல் சிற்ப விவகாரம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர்.

நாகா்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் மணல் சிற்பத்தை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தை அரசியல் சண்டைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று உயா்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், வடசேரியில், நெடுஞ்சாலையின் நடுவே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மணல் சிற்பம் அண்மையில் அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் மணல் சிற்பத்தால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக நாகர்கோவிலைச் சேர்ந்த மகேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், கே.கே. சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன் திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. 

மறைந்த ஜெயலலிதாவின் மணல் சிற்பம் அமைந்துள்ள அதே பகுதியில்தான் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகேலேயே உள்ளது என்றும், இதனால் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் இல்லை என்றும் கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்
என்று அரசு வழக்குறிஞர் கூறினர்.

வழக்கு விசாரணையின்போது, உங்கள் அரசியல் சண்டைகளுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார். மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்து வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை
உத்தரவிட்டது.