சிவகங்கை

 

இரயில் பாதை பராமரிப்பு பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது என்று காரைக்குடி இரயில் நிலையத்தில் டி.ஆர்.இ.யூ.தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இரயில் நிலையத்தில் டி.ஆர்.இ.யூ.தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் தரணி தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் செங்கதிர்செல்வம் முன்னிலை வகித்தார்.

 

சங்க உதவி பொதுச் செயலாளர்கள் திருமலைஅய்யப்பன், சாம்பசிவம், கோட்டச் செயலாளர் சங்கரநாதன், உதவிச் செயலாளர் ஜோசப்அமல்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் "திருச்சி - இராமேசுவரம் இரயில் பாதை பராமரிப்பு பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. இதனால், இரயில்வே கேங்மேன் தொழிலாளர்கள் வேலை கேள்விக்குறியாகி உள்ளதால் மத்திய அரசு இந்தச் செயலை கைவிடக்கோரி வேண்டும் என்றும்,

 

கேங்மேன் வேலை பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் இந்த  ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன,

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியன் உள்பட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.