தி.மு.க மகளிர் அணி துணை தலைவிக்கு அரிவாள் வெட்டு 2 பைக்கில் வந்த மூன்று மர்மநபர்கள் வெறிச்செயல் சென்னை தாம்பரம் அடுத்த அகரம் தென் பகுதியை சேர்ந்த பெண் ரேணுகா (வயது-37). புனிததோமையார் மலை ஒன்றிய திமுக மகளிர் அணி துணைத் தலைவராக உள்ளார். இன்று காலை வழக்கம் போல் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று தனது குழந்தைகளை பள்ளி பேருந்தில் ஏற்றிவிட்டு திரும்பினார்.
அப்போது அங்கு இரண்டு பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழி மறித்து சரமாரியாக வெட்டியது. வாய்,கழுத்து ஆகிய பகுதியில் வெட்டு விழுந்தது. இதை பார்த்த அப்பகுதியினர் ஓடிவந்த போது அவரை வெட்டிய அந்த கும்பல் தப்பி ஓடியது.
உயிருக்கு போராடிய நிலையில் கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் ரேணுகா அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொடூர தாக்குதல் குறித்து சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்திய கும்பலை தேடி வருகின்றனர்.
