Asianet News TamilAsianet News Tamil

கோமியத்துக்கு 50% கூட வரி போடுங்க.! குழந்தைகள் சாப்பிடும் பால்,தயிருக்கு வரி ஏன்.?பாஜகவை அலறவிட்ட திமுக எம்.பி

கோமியத்துக்கான ஜிஎஸ்டியை 50% கூட உயர்த்திக்கொள்ளுமாறும் குழந்தைகள், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பால், தயிருக்கான வரியை குறைக்குமாறு நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.

DMK MP said that instead of taxing milk and curd put even 50 percent tax on gomyam
Author
Delhi, First Published Aug 2, 2022, 2:15 PM IST

நாடாளுமன்றத்தில் தொடரும் கூச்சல்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. இதில், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.  எதிர்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவையும், மாநிலங்களவையும்  தினம்தோறும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறன. மேலும் பண வீக்கம், பொருளாதார நெருக்கடி,  சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி அவையில் பிரச்சனைகள் எழுப்பப்பட்டதால் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் விலைவாசி உயர்வு தொடர்பாக அவையில் நேற்று பேசிய திமுக எம்பி கனிமொழி, சாமானியர்கள் குழந்தைகளுக்கு உணவு அளிக்க திண்டாடும் நிலை உள்ளதாகவும், 3 வேளையும் சட்னி அரைத்து சாப்பிட முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

ரப்பர்,மேகி விலை கூடிடுச்சு.! பென்சிலை திருடுகிறார்கள்... வேதனையோடு மோடிக்கு கடிதம் எழுதிய 6 வயது சிறுமி

DMK MP said that instead of taxing milk and curd put even 50 percent tax on gomyam

மோடி அரசு கார்ப்பரேட் அரசு

இதனை தொடர்ந்து பேசிய திமுக தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர்  செந்தில்குமார்,  தமிழக அரசு அனைத்து மக்களுக்குமான அரசாக இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் மக்களுக்கு தேவையான உணவுகளை சிவில் சப்ளை மூலம்  வழங்கப்படுவதாக கூறினார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான  அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே ஆதரவாக இருப்பதாக குற்றம்சாட்டினார். ஜி.எஸ்.டியால் பால், தயிர், உருளைக் கிழங்குகளின் விலையை உயர்த்தப்பட்டு வருகிறது எனவும் விமர்சித்தார்.

திருப்பதி கோவில் வரலாற்று சாதனை.. இதுவரை இல்லாத அளவு குவிந்த உண்டியல் காணிக்கை.. எவ்வளவு கோடி தெரியுமா

DMK MP said that instead of taxing milk and curd put even 50 percent tax on gomyam

கோமியத்திற்கு வரி விதியுங்கள்

பேக்கிங் செய்யப்பட்ட பால் மற்றும் தயிர்கள் பாதுகாப்பாக இருப்பதால் மக்களை அதனை விரும்பி வாங்குகின்றனர். ஆனால் அதற்க்கு மத்திய அரசு வரி விதித்துள்ளதாக கூறினார். எனவே மத்திய அரசு  வேண்டுமானால்  ஒரு பொருளுக்கு 50% கூட ஜிஎஸ்டி வரியை உயர்த்திக்கொள்ளட்டும். அந்த பொருள் கோமியம் என தெரிவித்தார்.எனவே கோமியத்திற்கு வரி விதித்து பால்,தயிர் ஆகியவற்றுக்கான வரியை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  

இதையும் படியுங்கள்

national herald case:காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கப்பிரிவு திடீர் ரெய்டு

Follow Us:
Download App:
  • android
  • ios