நாமக்கல் சிறுமி உயிரிழந்த சோகம்... திமுக ஆட்சியில் தொடர லாயக்கில்லை: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
நாமக்கல் சிறுமி உயிரிழந்தது பற்றி ட்விட்டரில் கருத்து கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சி நடத்துவதற்கான தார்மீக உரிமையை இழந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.
நாமக்கல் சிறுமி ஷவர்மா சாப்பிட்டு இறந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக இனியும் ஆட்சியில் தொடர்வதற்கான தனது தார்மீக உரிமையை இழந்துள்ளது என விமர்சனம் செய்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள துரித உணவகம் ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த உணவகத்தில் சாப்பிட்ட மேலும் 20 பேர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்தநாளை கொண்டாட நண்பர்கள் 10 பேருக்கு இதே உணவகத்தில் ட்ரீட் கொடுத்திருக்கிறார். அவர்களுக்கும் இன்று காலை வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு, காய்ச்சல் என உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முழுவதும் இந்தியில் தான் இருக்கு... ஆத்திரத்தில் நிகழ்ச்சி நிரலை கிழித்தெறிந்த திருச்சி சிவா
இந்நிலையில் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சி நடத்துவதற்கான தார்மீக உரிமையை இழந்துவிட்டதாக விமர்சித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது:
"நாமக்கல்லில் “ஷவர்மா” சாப்பிட்ட 13வயது சிறுமி கலையரசி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அதே கடையில் ஷவர்மா சாப்பிட்ட மேலும் 17 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வருகின்றன.
சமீபகாலமாக தமிழகத்தில் நடந்து வரும் இத்தகைய மரணங்களை பார்க்கும்போது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், டெங்கு போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதிலும் இந்த அரசு முற்றிலும் தோல்வியுற்றுள்ளதை உணர முடிகிறது.
மனித உயிர்கள் மீது சிறிதும் அக்கறையின்றி செயல்படும் இந்த அரசை வன்மையாக கண்டிப்பதுடன்,
பொதுமக்களின் அடிப்படை தேவையான சுகாதாரத்தை காக்கத் தவறிய இந்த அரசு இனியும் ஆட்சியில் தொடர்வதற்கான தனது தார்மீக உரிமையை இழந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, உணவகத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, அந்த உணவகத்தில் கெட்டுப் போன இறைச்சி பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி ஷவர்மா செய்வதற்கான இயந்திரமும் அசுத்தமாக இருந்துள்ளது.
இதனால் ஆட்சியர் உமா உடனடியாக உணவகத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். மேலும் அங்கிருந்து உணவுப் பொருட்களின் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிகமாக ஷவர்மா விற்படை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
67 லட்சம் போச்சு! கூகுள் ஊழியரின் உல்லாச வாழ்க்கையில் மண் அள்ளி போட்ட கிரிப்டோகரன்சி!