திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் திருமலை படுகொலை செய்யப்பட்டார். 

திமுக விவ​சாய அணி துணை அமைப்​பாளர்

திரு​வண்​ணா​மலை மாவட்​டம் செய்​யாறு அடுத்த உக்​கம்​பெரும்​பாக்​கம் ஊராட்சி மன்ற முன்​னாள் தலை​வ​ராக இருந்​தவர் பிர​பாவ​தி. இவரது கணவர் திரு​மலை(52). இவர், திரு​வண்​ணா​மலை வடக்கு மாவட்ட திமுக விவ​சாய அணி துணை அமைப்​பாள​ராக இருந்து வருகிறார். இந்​நிலை​யில், வழக்கு விசாரணைக்காக செய்​யாறு நீதி​மன்​றத்​தில் ஆஜராகிவிட்டு உக்​கம்​ பெரும்​பாக்​கம் கிராமத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்​டிருந்​தார். 

சரமாரியாக வெட்டி படுகொலை

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த கும்பல் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்துள்ளனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தப்பிக்க முயற்சித்துள்ளார். ஆனால், அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த திருமலை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பியது.

தனிப்​படைகள் அமைப்பு

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தூசி போலீ​சார் திரு​மலை​யின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்​காக செங்​கல்​பட்டு அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​ வைத்​தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலை​யாளி​களைப் பிடிக்க இரண்டு தனிப்​படைகள் அமைக்கப்பட்டது. 

முன்விரோதம் காரணமாக கொலை

முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றிக்கலாம் என தெரியவந்துள்ளது. அதாவது கொலை​யான திரு​மலைக்​கும், அதே கிராமத்​தைச் சேர்ந்த இரண்டாம் நிலை காவல​ராக பணி​யாற்றி வந்த ராஜா​ராம்​(37) என்​பவருக்​கும் இடையே முன்​விரோதம் இருந்துள்​ளது. கடந்த 2022-ம் ஆண்டு ராஜா​ராம், தனது கூட்​டாளி​களு​டன் திரு​மலையை கடத்​திச் சென்​று, அடித்து உதைத்து அனுப்பி வைத்​துள்​ளார். இந்த வழக்​கில் ராஜா​ராம் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். சமீபத்​தில் ஜாமீனில் ராஜா​ராம் வெளியே வந்த நிலையில் இந்த கொலை நடைபெற்றுள்ளதால் அவருக்கு தொடர்பு இருக்குமோ என போலீசார் சந்தேகிக்கின்றனர்.