திமுக ஊழல்வாதிகளின் கூடாரம்.. மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் - எம்.பி ராசாவை கடுமையாக சாடிய கே. அண்ணாமலை!
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஆ. ராசாவின் 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. இது திமுக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.
இந்நிலையில் ராசாவுக்கு சொந்தமான 15 ஆசையா சொத்துக்களை கையகப்படுத்தியுள்ள அமலாக்கத்துறை, சட்ட விரோதமாக பணபரிவர்த்தனை செய்வதை தடுக்கும் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கோவையில் பினாமி நிறுவனம் ஒன்றின் பெயரில் அவருடைய சொத்துக்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது
இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்.. "கடந்த 2011 ஆம் ஆண்டில் டைம் இதழ், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த சலுகை பெற்ற தலைவர்களின் இழிவான பட்டியலில் ராசாவை சேர்த்து பட்டியலிட்டது".
"2004-2007க்கு இடையில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஆ. ராசா தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும், சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதற்காக லஞ்சம் பெற்றதாகவும் அமலாக்க இயக்குனரகம் இன்று அம்பலப்படுத்தியுள்ளது".
"திமுக ஊழல்வாதிகளின் கூடாரமாகத் தனது நிலைப்பாட்டை தொடர்கிறது. 11 திமுக அமைச்சர்கள் மீது கடுமையான ஊழல் புகார்கள் உள்ளன மேலும் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன மற்றும் பலர் மீது பணமோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்ததற்காக, திமுக தமிழக மக்களிடம் பணிந்து மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று அவர் தனது பதிவில் காட்டமாக கூறியிருந்தார்.
செவிலியர்கள் மீது போலீசை ஏவி அடக்குமுறை செய்வதா? திமுகவை விளாசும் சீமான்