ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திகுமார் 90 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திகுமார் 90 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் அதிமுக, பாஜக மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்தன.

காங்கிரஸ் தன்வசம் இருந்த தொகுதியை திமுகவுக்கு விட்டுக்கொடுத்தது. திமுக வேட்பாளராக சந்திரகுமார் அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது.

தமிழ்நாட்டு வீராங்கனை கமாலினி, சுப்ரமணிக்கு ரூ.25,00,000 ஊக்கத் தொகை! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

அதைத் தொடர்ந்து இன்று (பிப்ரவரி 8) ஈரோடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1,14,439 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்திருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நா.த.க. 23,810 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி டெபசிட் பெற 25,777 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், வெறும் 1967 வாக்குகள் வித்தியாசத்தில் டெபாசிட் தொகையை இழந்துள்ளது. 6,040 வாக்குகளைப் பெற்ற நோட்டாவுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 1,54,657 வாக்குகள் பதிவாகியுள்ளன. இவை 17 சுற்றுகளாக எண்ணப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையின்போது 3 வாக்கு இயந்திரங்கள் மட்டும் பழுது ஏற்பட்டது. அவற்றைச் சரிசெய்து எண்ணும் பணி மட்டும் நடைபெற்று வருகிறது. சற்று நேரத்தில் அவையும் எண்ணப்பட்டு இறுதி நிலவரம் தெரியவரும்.

டி.என்.பி.எஸ்.சி மீது திமுக அரசுக்கு நம்பிக்கை இல்லையா? அப்புறம் எதற்கு மீண்டும் மீண்டும் நேர்காணல்? அன்புமணி!