District Collector Rohini has ordered the dismissal of the Panchayat Secretary Regina by claiming that the dengue preventive measures were reluctant.

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் மெத்தனமாக இருந்ததாக கூறி ஊராட்சி செயலாளர் ரெஜினாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ரோகினி உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் டெங்குவால் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் உயிரிழந்து வருகின்றனர். அதனால் கிராமம் கிராமமாக சென்று சுகாதாரத்துறை நிலவேம்பு கசாயம் அழிப்பதோடு டெங்குவை ஒழிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் டெங்கு கட்டுக்குள் இருப்பதாகவும், தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு கூறி வருகின்றது. 

ஆனால் சேலத்தில் மட்டும் டெங்குவுக்கு 9 நாட்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் ரோகினி கிராமம் கிராமமாக சென்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். 

இந்நிலையில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் மெத்தனமாக இருந்ததாக கூறி ஊராட்சி செயலாளர் ரெஜினாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ரோகினி உத்தரவிட்டுள்ளார்.

மேல்நிலை தொட்டிகளில் குளோரின் கலாக்காமல் பணியில் அலட்சியம் காட்டியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனை அடுத்து ஊராட்சி செயலாளர் ரெஜினாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.