மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடை மூட உத்தரவு.. மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு- அதிர்ச்சியில் மது பிரியர்கள்
மருது பாண்டியர் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜையையொட்டி மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுபான கடைகள் 3 நாட்களுக்கு மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள் மூடல்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பல்வேறு கட்டப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பாக எடுக்கப்படுகிறது. இந்தநிலையில் மருது பாண்டியர் நினைவு தினம், தேவர் குரு பூஜையையொட்டி மதுரை மாவட்டத்தில் இன்றும், நாளை மறுதினம் மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று (அக்டோபர் 27, 29,30) தினங்கள் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மனமகிழ் மன்றங்கள், பார்கள் உள்ளிட்டவையும் 29 மற்றும் 30 ஆகியவற்றை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
3 நாட்களுக்கு மூட உத்தரவு
இதே போல பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா நடைபெறுவதையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் பசும்பொன் பகுதிக்கு வர உள்ளதால் எந்த வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் வரும் 28, 29, 30 ஆகிய 3 தினங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் மூடவேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படியுங்கள்