ஜூஸ் பாக்கெட் வடிவில் விற்பனைக்கு வருகிறது 90ml மது - குடிமகன்களின் தேவையை பூர்த்தி செய்ய அரசு தீவிரம்
மதுபானத்தை டெட்ரா பாக்கெட்டில் கொண்டு வருவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் அத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் முத்துசாமி, டாஸ்மார்க் பணியாளர்கள் பிரச்சினை என்ன என்பது குறித்து விவாதித்தோம். டாஸ்மார்க் கடை பணியாளர்கள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
டாஸ்மார்க் பணியாளர்கள் வங்கிக்கு செல்லாமல், வங்கி நேரடியாக பணம் பெற்றுக்கொள்ள முடியுமா என ஆய்வு செய்கின்றோம். பார்களை அதற்கான உரிமம் இருப்பவர்கள் தான் நடத்த முடியும். உரிமம் இல்லாமல் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். டார்க்கெட் என்பது வருமானத்திற்காக அல்ல, மக்கள் வேறு எங்கும் தவறான வழிக்கு செல்கிறார்களா என்பதை ஆய்வு செய்தான் டார்கெட் வைக்கப்படுகிறது.
ஆட்சியை கலைத்தாலும் பரவாயில்லை என்ற முதல்வரின் கொள்கை பிடிப்பை விசிக வரவேற்கிறது - திருமாவளவன்
மது பாட்டில்களை சாலைகளில் போடுவதால் நிறைய பிரச்சினைகள் உள்ளன. இதனால் மற்ற மாநிலங்களில் உள்ளது போல் டெட்ரா பாக்கெட் வந்தால் எளிதாக பயன்படுத்தலாம். மதுபானத்தில் 180 Ml முழுமையாக பயன்படுத்த முடியாது என்பதால் வேறு ஒருவருக்காக காத்திருக்கிறார்கள். எனவே 90Ml டெட்ரா பாக்கெட் கொண்டு வர ஆய்வு நடத்தப்படுகிறது. சிலர் காலையில் விரைவாக கடைகளை திறக்க கோரிக்கை வைக்கின்றனர். இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன எனவே இதுகுறித்து ஆய்வு செய்யப்படும்.
ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் விபத்து; வேன் கவிழ்ந்து 16 பெண்கள் காயம்
நேரம் மாற்றி அமைப்பதில் நிறைய பிரச்சினைகள்கள் உள்ளன. அரசையும் விமர்சிப்பார்கள். எனவே இதுகுறித்து முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. மதுபானத்திற்க்கு பில் தருவது தொடர்பாவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. தவறுகள் இங்கே வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.