மக்கள் நலனுக்கு எதிரான தேசியக் கல்விக் கொள்கை 2020 யை தமிழ்நாடு மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் இது குறித்து யார், எங்கு அழைத்தாலும் விவாதிக்க தயாராக இருப்பதாகவும் மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
மக்கள் நலனுக்கு எதிரான தேசியக் கல்விக் கொள்கை 2020 யை தமிழ்நாடு மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் இது குறித்து யார், எங்கு அழைத்தாலும் விவாதிக்க தயாராக இருப்பதாகவும் மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.இதுக்குறித்து ஏசியாநெட் சேனலிடம் பேசிய அவர், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பார்வை, நோக்கம் மற்றும் அதன் பல்வேறு பிரிவுகளுக்கும் நேர் எதிரானது தேசியக் கல்விக் கொள்கை 2020. தமிழ்நாடு அரசு தனது மறுமதிப்பீட்டு நிதிநிலை அறிக்கையில் குழந்தைகள் கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக போதிய கல்விவசதி இல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்த நிலையில், கல்வியை மேம்படுத்த ஆறுமாத காலத் திட்டம் கொண்டுவரப்பட்டது என்றார்.
மேலும் மாநில அரசின் இந்த திட்டத்திற்கும்,யார் வேண்டுமானாலும் பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் மாணவர்களின் கற்றல் செயல்பாட்டிற்கு உதவலாம் என தேசியக் கல்விக் கொள்கை 2020ல் கூறப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை தெளிவுபட விளக்கம் அளித்துள்ளது என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க: சட்டவிரோதமாக அமைப்படும் ஹைட்ரோகார்பன் கிணறு..? குற்றச்சாட்டும் மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு..
குழந்தைப் பருவத்தில் வேலை வாய்ப்பிற்கானப் பயிற்சி என்பதும், 3, 5, 8 வகுப்புகளில் தேர்வு என்பதும் குழந்தைகள் மனதில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும். மேலும் மாணவர்களை நேரடிப் பள்ளிக் கல்வியில் இருந்தும்,உயர் கல்வியில் இருந்தும் வெளியேற்றும் நிலை ஏற்படும் என்று கூறும் அவர், அதையும் மீறி மாணவன் ஒருவர் உயர் கல்வி நுழைய முற்பட்டால்,பட்டப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு, முதல் ஆண்டில் அனைத்துத் தாளிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இரண்டாம் ஆண்டு தொடர முடியும், மூன்றாண்டுகள் பட்டப் படிப்பை நான்கு ஆண்டுகள் ஹானர்ஸ் பட்டமாக மாற்றி, மூன்றாம் ஆண்டியில் 7.5 புள்ளிகள் இருந்தால் மட்டுமே நான்காம் ஆண்டு தொடர முடியும் என்றும் முட்டுக்கட்டை போடப்படுகிறது என்று குற்றச்சாட்டுகிறார்.
இதனிடையே தேசியக் கல்விக் கொள்கை என்பது பட்ட மேற்படிப்பு, உயர் வேலை வாய்ப்புகளில் பெரும் பகுதி மாணவர்கள் பங்கேற்கத் தகுதியற்றவர்களாக்கி, காலம் காலமாக உயர் கல்வியிலும், உயர் வேலைவாய்ப்பிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு எதிர்காலத்தில் போட்டியே இல்லாத சூழலை ஏற்படுத்தும் சூழ்ச்சிக்கு வழிவகுக்கிறது என்று திட்டவட்டமாக தெரிவிக்கிறார்.
மேலும் படிக்க: இதுதாண்டா தமிழ்நாடு..!’ மாரியம்மன் கோவில் பக்தர்களுக்கு இசுலாமியர்கள் செய்த தொண்டு..
அதே போன்று பல கல்லூரிகளை இணைத்து "கல்லூரி வளாகம்" உருவாக்க வேண்டும் அல்லது கல்லூரி ஒவ்வொன்றும் பல்துறை உயர்கல்வி நிறுவனமாகச் செயல்பட வேண்டும் என்று புதிய கல்விக்கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அரசு உயர்கல்வி நிறுவனங்களுக்குத் தேவையற்ற நிர்பந்தங்களை உருவாக்கி, அவற்றை சுயநிதி நிறுவனங்களாக மாற்றுவதும், தனியாரிடம் ஒப்படைப்பதும் என்பதே இதன் நோக்கம் என்று ஆணித்தரமாக கூறுகிறார்.
எனவே மக்கள் நலனுக்கு எதிரான தேசியக் கல்விக் கொள்கை 2020யை தமிழ்நாடு மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் இது குறித்து யார், எங்கு அழைத்தாலும் விவாதிக்க தயாராக உள்ளதாக பொது கல்விக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
