காரைக்குடிடில் மாசி-பங்குனி திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கொழுத்தும் வெயிலில் பால்குடம் சுமந்து வந்த நிலையில் முஸ்லீம் மக்கள் சாலைளில் தண்ணீர் ஊற்றி வெப்பம் தணித்தனர். 

காரைக்குடிடில் மாசி-பங்குனி திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கொழுத்தும் வெயிலில் பால்குடம் சுமந்து வந்த நிலையில் முஸ்லீம் மக்கள் சாலைளில் தண்ணீர் ஊற்றி வெப்பம் தணித்தனர். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்திற்கு உட்பட்டு ஏராளமான கோவில்கள் உள்ளன. அந்த வகையில் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலும் இந்து சமய அறநிலையத்திற்கு உட்பட்டது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வரும் மாசி-பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு இந்த விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த திருவிழாவையொட்டி நேற்று முதல் விரதம் இருக்கும் பக்தர்கள் மஞ்சள் நிற ஆடையையுடன் இருந்ததால் காரைக்குடி முழுவதும் மஞ்சள் நிறமாக காட்சியளித்தது. இந்த திருவிழாவையொட்டி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

பக்தர்கள் தினந்தோறும் பால் குடம் எடுத்தும் மாவிலக்கு வைத்து அக்னிசட்டி எடுத்தும் அலகு குத்தியும் அம்மனை வழிபட்டு வருகின்றனர். காரைக்குடி செஞ்சைப்பொட்டல் முத்தாலம்மன் கோவிலில் இருந்து மீனாட்சி புரம் முத்துமாரியம்மன் கோவில் வரைக்கும் ஏராளமான பக்தர்கள் 2 கிலோமீட்டர் தூரம் வரை பால்குடம் சுமந்து சென்று தங்களது நேரத்திக்கடன் செலுத்தினர். தற்போது, பால்குடம் சுமக்கும் பக்தர்களுக்கு ஏராளமானோர் மஞ்சள் தண்ணீர் ஊற்றி குளிர்வித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

அப்போது பஜார் பள்ளிவாசல் பகுதியில் முஸ்லீம் மக்கள் சாலைளில் தண்ணீர் ஊற்றி வெப்பம் தணித்தனர். கோடை வெயிலில் சுடச்சுட நடந்து பால்குடம் சுமந்து சென்றவர்களின் பாதங்களை முஸ்லீம் மக்கள் குளிர்வித்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட திருவிழா நாளை மறுநாள் 16 ஆம் தேதி காலையில் நடக்கிறது. அன்றைய தினம் விரதம் இருக்கும் பக்தர்கள் காரைக்குடி முத்தாலம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனை தரிசனம் செய்ய உள்ளனர். அதை தொடர்ந்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். மாலையில் கரகம் பருப்பூரணிக்கு கொண்டு சேர்க்கும் நிகழ்ச்சியும், 17ஆம் தேதி இரவு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.