Asianet News TamilAsianet News Tamil

Omicron : ஒமைக்ரானிடம் இருந்து தப்பிக்கனுமா? பொது சுகாதாரம் & நோய்த் தடுப்பு மருந்துத்துறை கூறும் வழிமுறை!!

ஒமைக்ரான் என்னும் புதிய வகை கொரோனா வைரஸில் இருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் விளக்கம் அளித்துள்ளார். 

Directorate of Public Health & Preventive Medicine says about omicron
Author
Chennai, First Published Dec 1, 2021, 5:25 PM IST

ஒமைக்ரான் என்னும் புதிய வகை கொரோனா வைரஸில் இருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் விளக்கம் அளித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி ஓமைக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பின்னர் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் கண்டறியப்பட்டது. இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது.  இது 32 முறை உருமாற்றமடைந்து ஓமைக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்த இந்த ஒமைக்ரான், தற்போது பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.

Directorate of Public Health & Preventive Medicine says about omicron

இதனால் அச்சமடைந்த உலக நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் இடையேயான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. மேலும் சில நாடுகள் அந்நாட்டிலிருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கின்றன. இந்தியாவில் இதுவரை யாரும் ஒமைக்ராவால் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இருந்த போதிலும் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தென் ஆப்ரிக்கா, சிங்கப்பூர், சீனா, பிரேசில், போத்ஸ்வானா, மொரீஷியஸ்,  இஸ்ரேல், ஹாங்காங், ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகள் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் இந்த நாடுகளிலிருந்து இந்தியா வருகை தரும் பயணிகள், பயணத்திற்கு முன்பே கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ஒமைக்ரான் என்னும் புதிய வகை கொரோனா வைரஸில் இருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் விளக்கம் அளித்துள்ளார்.

 

அதில், கொரோனா உருமாறி புதிய வகை ஒமைக்ரான் என்னும் வைரஸ் ஆக உருவெடுத்துள்ளது. வைரஸ் உயிர்வாழ்வதற்காக உருமாறிக்கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது உருவாகியுள்ள ஒமைக்ராம் என்னும் புதிய வகை வைரஸை உலக சுகாதார அமைப்பு கடந்த நவம்பர் 26 ஆம் தேதி கண்டறிந்தது. வெளிநாடுகளில் இருந்து இந்த வைரஸ் பரவக்கூடும் என்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும்  தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்டறிந்து அவர்களுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை ஆராய்ந்து வைரஸின் வீரியம் மற்றும் அதன் பரவக்கூடிய தன்மை ஆகியவற்றை குறித்து சோதனைக் கூடங்களில் பரிசோதிக்கப்படுகிறது. ஒமைக்ரான் என்னும் உருமாறிய கொரோனா உருவாகும் போதோ அல்லது தமிழகத்திற்குள் நுழையும் போதோ நமது கண்காணிப்பு மூலம் அதனை எளிமையாக கண்டறியும் வகையில் அனைத்து வழிமுறைகளையும் தமிழக அரசு செய்துள்ளது. எனவே, பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும், அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இதனை செய்தாலே எந்தவித உருமாற்றம் வந்தாலும் அதிலிருந்து எளிதாக மீண்டு வரலாம் என்று தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios