Asianet News TamilAsianet News Tamil

அனுமதியின்றி முகாம் நடத்தினால் கடும் நடவடிக்கை! தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை!

பெற்றோர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியின்றி முகாம்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. என்சிசி முகாமில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Directorate of Private Schools Warning tvk
Author
First Published Aug 20, 2024, 1:48 PM IST | Last Updated Aug 20, 2024, 1:54 PM IST

பெற்றோர், மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியின்றி முகாம் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வளாகத்தில் கடந்த  என்சிசி முகாமில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவேரிப்பட்டினத்தை சேர்ந்த சிவராமன் (30) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை முதல்வர் சதீஷ்குமார் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், முகாமில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனியாக ஆசிரியர், ஆசிரியைகளை நியமிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. 

இதையும் படிங்க: School Student: பள்ளி மாணவ, மாணவியருக்கு முக்கிய செய்தி.. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

இதுதொடர்பாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிச்சாமி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: தனியார் பள்ளிகளில் அனுமதி பெறாமல் என்சிசி உள்ளிட்ட முகாம்கள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் சுயநிதிப் பள்ளிகளில் என்சிசி, என்எஸ்எஸ், ஸ்கவுட்  மற்றும் ஜேஆர்சி போன்ற அமைப்புகள் செயல்படுகின்றன. 

இதையும் படிங்க:  School Holiday: குட்நியூஸ்! ஆகஸ்ட் 24, 25, 26 ஆகிய 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை!

அந்த அமைப்புகளை பள்ளிகளில் செயல்படுத்த மாநில அமைப்பிடம் முறையாகப் பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். முறையாக பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் எந்தவொரு அமைப்பும் பள்ளியில் செயல்படக்கூடாது. மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள் மூலமாகவும், மாணவிகளுக்கு பெண் ஆசிரியைகள் மூலமாகவும் மட்டுமே பயிற்சிகள் வழங்க வேண்டும். அனுமதி இல்லாமல் நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தனியார் பள்ளிகள்  இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios