School Holiday: குட்நியூஸ்! ஆகஸ்ட் 24, 25, 26 ஆகிய 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை!
கடந்த வாரம் சுதந்திர தினம் மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் அடுத்த வாரம் பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.
Goverment School Teacher
தமிழகத்தில் 2024 - 2025ம் கல்வியாண்டில் பள்ளிகள் விடுமுறை குறைக்கப்பட்டு 220 வேலை நாட்களாக உயர்த்தப்பட்டது. குறிப்பாக 20 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இது ஆசிரியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன்படி தமிழகம் முழுவதும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு வந்தன.
School Education Department
இந்நிலையில் வழக்கம் போல் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை விட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கை ஏற்றுக்கொண்ட பள்ளிக்கல்வித்துறை கூடுதல் வேலை நாட்களை திரும்ப பெற்றுக்கொண்டது.
இதையும் படிங்க: School College Student: மாணவர்களுக்கு ரூ.5000 பரிசுத்தொகை! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
School Holiday
இதனையடுத்து 15ம் தேதி வியாழக்கிழமை சுதந்திர தினத்தை ஒட்டி அரசு விடுமுறை, சனி, ஞாயிறு விடுமுறை. இடையில் ஒருநாள் வெள்ளிக்கிழமை மட்டும் இருப்பதால் தொடர்ச்சியாக 4 நாட்கள் பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: School Holiday: ஆகஸ்ட் 19ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறையா? வெளியான முக்கிய தகவல்!
Krishna Janmashtami Holiday
இந்நிலையில், அடுத்த வாரம் திங்கள்கிழமை கோகுலாஷ்டமிக்கு அரசு விடுமுறை, அதற்கு முந்தை நாள் ஞாயிற்றுக்கிழமையாகி விடுகிறது. இடையில் சனிக்கிழமை அன்று தமிழக அரசு விடுமுறை அளிக்கும் பட்சத்தில் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த விடுமுறை தொடர்பான விவகாரத்தில் அரசு எந்த மாதிரியான முடிவு எடுக்கப்போகிறது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.