Asianet News TamilAsianet News Tamil

மகளிர் உரிமை திட்டத்தால் அதிமுகவுக்கு நன்மை செய்யும் ஸ்டாலின்: திண்டுக்கல் சீனிவாசன்!

மகளிர் உரிமை திட்டத்தால் அதிமுகவுக்கு ஸ்டாலின் நன்மை செய்வதாக திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்

Dindigul srinivasan says kalaignar cash is benefit for admk women vote will come
Author
First Published Jul 31, 2023, 11:36 AM IST

மகளிர் உரிமை திட்டம் மூலம் தகுதி உள்ள பெண்களுக்கு மட்டும் ரூ.1000 கொடுக்கும் திட்டத்தின் மூலம் ஸ்டாலின் நமக்கு நன்மை செய்து கொண்டு இருக்கின்றார். இதனால் அனைத்து பெண்களும் அதிமுக பக்கம்தான் வருவார்கள் என தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக பொன்விழா மாநாடு ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுகல் சீனிவாசன்  தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக பொன் விழா மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம் அதிமுக  தெற்கு மாவட்ட  செயலாளர் எஸ்பி சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி, திருச்செந்தூர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில்   நடைபெற்றது.

இந்த  ஆலோசனை  கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் கேபி.முனுசாமி,  பொருளாளர் திண்டுக்கல் சி. சீனிவாசன்,  துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன், அமைப்புச் செயலாளர் செங்கோட்டையன்,  பி தங்கமணி, செல்லூர் ராஜு, என்.சின்னத்துரை, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி வேலுமணி,  அமைப்புச் செயலாளரும், எம்பியுமான சி.வி.சண்முகம்,  மகளிர் அணி செயலாளர் வளர்மதி, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா, கழக இளைஞர் பாசறை செயலாளர் பரமசிவம், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.‌ 

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “50 ஆண்டு காலம் நிறைவு செய்த அதிமுக பல்வேறு போராட்டங்கள் சோதனைகளை சந்தித்துள்ளது. பதவி வெறியர்கள் சின்னத்தை முடக்கினர். ஆனால் எடப்பாடியார் தொண்டர்களின் துணையோடு மீண்டும் சின்னத்தை மீட்டெடுத்தார். துரோகம், சூழ்ச்சி செய்யும் சிலர் திமுகவுடன் சேர்ந்து அதிமுகவை காலி செய்ய நினைக்கின்றனர். அது நடக்காது இரட்டை இலை சின்னம் இருக்கும் வரை எந்த கொம்பனாலும் இன்றும் செய்ய முடியாது.” என ஆவேசமாக பேசினார். மேலும் மதுரையில் நடைபெற இருக்கும் மாநாடு, வீர வரலாறு மாநாடாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ராமநாதபுரம் தொகுதியில் மோடியை களத்தில் இறக்கும் திட்டத்தில் இருந்து பின் வாங்கும் பாஜக..! காரணம் என்ன.?

இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் திண்டுகல் சீனிவாசன் பேசுகையில், “பெரிய சாதித் தலைவர் என்று சொல்லுகின்ற டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜூவை எதிர்த்து நின்று வாங்கி கட்டி கொண்டார். இப்போது டிடிவி தினகரனும் ஓ.பன்னீர் செல்வமும் சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க போவதாக கூறுகின்றார்.  எத்தனை கேவலப்பட்டாலும் வெளியே போக மாட்டேன் என்கிறார்கள். திமுகவின் பி டீமாக செயல்படும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சரியான பாடத்தை அதிமுக கற்று கொடுத்து வருகிறது.” என்றார்.

மகளிர் உரிமை திட்டத்தால் அதிமுகவுக்கு ஸ்டாலின் நன்மை செய்வதாக தெரிவித்த அவர், “மகளிர் உரிமை திட்டம் மூலம் தகுதி உள்ள பெண்களுக்கு மட்டும் ரூ.1000 கொடுக்கும் திட்டத்தின் மூலம் ஸ்டாலின் நமக்கு நன்மை செய்து கொண்டு இருக்கின்றார். இதனால் அனைத்து பெண்களும் அதிமுக பக்கம்தான் வருவார்கள்.” என்றார்.

முன்னதாக, அவர் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது எஸ்.பி.சன்முகநாதன் அவருக்கு சால்வை அணிவித்தார். அப்போது, குறுக்கிட்ட திண்டுக்கல் சீனிவாசன், இதுவரை தூத்துக்குடிக்கு வந்தவுடன் மூன்று முறை சால்வை அணிவித்து விட்டார். பேசாமல் ஒரு துணிக்கடை வைத்து தரலாம் என நகைச்சுவையாக பேசினார். இதனால், கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.

இதைதொடர்ந்து அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனியசாமி பேசுகையில், “வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அச்சாரமாகத்தான் மாநாடு நடைபெறுகிறது. இந்த தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் உள்ள கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த  அவரது மகள் கனிமொழியை தோற்கடித்தால் திமுகவின் அகங்காரம் வீழ்த்தப்படும். அதிமுக கூட்டணியில் யார் போட்டியிட்டாலும் எதிர்த்து நிற்கிற திமுக வேட்பாளர் கனிமொழியை தோற்கடிப்பதுதான் நமது இலக்காக இருக்க வேண்டும்.” என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios