முதுநிலை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இரு வேறு மாறுபட்ட கருத்தை பதிவு செய்துள்ளனர்.

முதுநிலை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை நேற்றோடு முடிவடைந்தது.

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், மற்றும் சுப்பிரமணியன் இரு வேறு மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளனர்.

மருத்துவ கவுன்சில் விதிப்படி புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று நீதிபதி சுப்ரமணியனும், 50 % இட ஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்வதாக நீதிபதி சசிதரனும் கருத்து தெரிவித்தனர்.

2 நீதிபதிகளின் மாறுபட்ட கருத்தால் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.