''ஒரு வார்த்தை கூட சொந்தமாக பேச தெரியவில்லை. எந்தவொரு தலைவர்களின் வரலாறும் தெரியவில்லை. இவர் தமிழகத்தை ஆளப் போகிறாராம்'' என்று நாம் தமிழர் கட்சியினர் விஜய்யை கிண்டலடித்து வருகின்றனர்.

ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பேசிய பேச்சு தான் இப்போது தமிழகம் முழுவதும் ஹாட் டாபிக் ஆக உள்ளது. ஈரோடு பொதுக்கூட்டத்தில் திமுகவை சரமாரியாக விமர்சித்த விஜய், திமுகவை தீய சக்தி என்றும், தவெக தூய சக்தி என்றும் தெரிவித்தார். மேலும் தன்னை கடுமையாக விமர்சித்து வரும் சீமானின் நாம் தமிழர் கட்சியையும் விஜய் விமர்சித்தார்.

சீமானை மறைமுகமாக விமர்சித்த விஜய்

"எதிரிகள் யார் என்று சொல்லிவிட்டுதான் அரசியலுக்கு வந்திருக்கிறோம். ஆகையால் அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். அதுவும் 2026 தேர்தலில், களத்தில் இருப்பவர்களைதான் எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களையும், களத்துக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லாதவர்களை எதிர்க்கும் எந்த ஐடியாவும் இல்லை. நீங்க கேட்குறத்துக்காக உங்களை எதிர்த்துட்டு இருக்க முடியாது'' என்று விஜய் சீமானின் நாம் தமிழர் கட்சியை மறைமுகமாக குறிப்பிட்டார்.

சீமானின் பேச்சை காப்பியடித்தாரா விஜய்?

மேலும் இலவசங்கள் குறித்து பேசிய விஜய், ''சலுகைகளுக்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் திமுகவினர் மக்களை ஓசியில் பயணம் என்று அவமரியாதை செய்கின்றனர். மக்கள் காசில் மக்களுக்கு செய்வதை எப்படி இலவசம் என்று சொல்வீர்கள்'' என்று தெரிவித்தார். சீமானின் பேச்சை விஜய் அப்படியே காப்பியடித்து பேசியதாக நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

Scroll to load tweet…

சீமான் பேசியது என்ன?

ஒரு பேட்டியில் பேசிய சீமான், ''மக்களின் காசை எடுத்து மக்களுக்கு திருப்பி கொடுப்பதை எப்படி இலவசம் என்று சொல்வதை நீங்கள் எப்படி ஏற்கிறீர்கள்?'' என்று கூறியுள்ளார். சீமானின் இந்த பேச்சை தான் விஜய் இன்று காப்பி அடித்து பேசியதாக சீமானின் வீடியோவையும் சமூகவலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

விஜய்யை கிண்டலடிக்கும் நாம் தமிழர் கட்சியினர்

''ஒரு வார்த்தை கூட சொந்தமாக பேச தெரியவில்லை. எந்தவொரு தலைவர்களின் வரலாறும் தெரியவில்லை. இவர் தமிழகத்தை ஆளப் போகிறாராம்'' என்று நாம் தமிழர் கட்சியினர் விஜய்யை கிண்டலடித்து வருகின்றனர். விஜய்யை விமர்சிக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கு தவெகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Scroll to load tweet…

திமுகவிடம் அடிபணிந்த சீமான்

''ஆண்டுக்கு ரூ.500 கோடி வருமானத்தை விட்டு மக்களுக்காக விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். திமுக அரசின் தவறுகளை தைரியத்துடன் எதிர்த்துக் கேட்கிறார். அவர் பின்னால் மக்கள் சக்தி அணிவகுத்து நிற்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பேசி திமுகவிடம் சரணடைய விஜய் ஒன்றும் சீமான் இல்லை'' என்று தவெகவினர் இணையத்தில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.