அத்துமீறி வீட்டிற்கே சென்ற அழகேசன்..! வற்புறுத்தி தாலி கட்ட முயற்சி....

சென்னை கேகே நகரில் இயங்கி வரும் மீனாக்ஷி கல்லூரியில் bcom முதலாம் ஆண்டு படித்து வருகிறார் அஷ்வினி

இன்று மதியம் அஷ்வினி கல்லூரி முடிந்து,வெளியில் வரும் போது அழகேசன் என்ற நபர் கத்தியால் குத்தி உள்ளார்.ரத்த வெள்ளத்தில் மிதந்த அஷ்வினி சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார்.

 

இதனை தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.தொடர்ந்து மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அஸ்வினி அழகேசனின் காதலை ஏற்க மறுத்ததால் கொலைசெய்ததாக  கூறப்படுகிறது.

அத்துமீறி வீட்டிற்கே சென்ற அழகேசன்

மதுரவாயலில் தங்கி இருந்த அஸ்வினிக்கு தொடர் காதல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், ஒரு நாள்  அழகேசன்  அஸ்வினி வீட்டிற்கே சென்று அவருக்கு தாலி  கட்ட முயன்றதால், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்  அஸ்வினி தரப்பினர்.

பின்னர்,போலீசார் அழகேசனை அழைத்து அறிவுரை கூறி சமாதானம் செய்து சனுப்பி  உள்ளனர்.இந்த சம்பவம் நடந்தது கடந்த மாதம் 16 ஆம் தேதி என கூறப்படுகிறது

பின்னர், அஸ்வினி,ஜாபர்கான் பேட்டையில் உள்ள தன் உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.கடந்த  10 நாட்களாகவே மன உளைச்சல்  காரணமாகவும், ஒருதலை  காதல் டார்ச்சர் காரணமாகவும்,கல்லூரிக்கு வராமல் இருந்துள்ளார் அஷ்வினி.

பின்னர் சில நாட்களாக கல்லூரி வர தொடங்கிய அஸ்வினியை நோட்டமிட்ட  அழகேசன் இன்று  மதியம் கத்தியால் குத்தி கொலை செய்து  உள்ளான்.