மதுபோதையில் கல்யாணத்துக்கு வராத மணமகன்..கடுப்பான மணப்பெண்.. கல்யாணம் ‘திடீர்’ நிறுத்தம்..
தருமபுரி பாலக்கோடு அருகே மணமகன் குடித்து விட்டு போதையில் இருந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண், இந்த சம்பவம் தருமபுரி அருகே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தர்மபுரி மாவட்டம், தொட்டபடகாண்ட அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நேரு நகரை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணிற்கும், திருமணம் நிச்சயக்கபட்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் வஜ்ஜிரபள்ளத்திலுள்ள ஈஸ்வரன் கோவிலில் நேற்று காலை இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில் திருமண நாளான நேற்று மணமகன் கோவிலுக்கு வராமல் குடித்து விட்டு வீட்டிலேயே மயங்கி கிடந்துள்ளார்.
இதை பார்த்த மணமகள் லட்சுமி குடிகார மணமகனும், வேண்டாம், திருமணமும் வேண்டாம் என மாலையை கழற்றி வீசிவிட்டார். திருமணத்திற்குண்டான செலவுகளை செட்டில் செய்ய கோரி பெண்ணின் தாய்மாமன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
நடந்த அனைத்தையும் நேரில் பார்த்துக் கொண்டிருந்த மணமகள், ‘தாலி கட்டவேண்டிய நாளிலேயே பொறுப் பின்றி போதையில் இருக்கிறார். இவரை திருமணம் செய்துகொண்டால் வாழ்நாள் முழுக்க பல பிரச்சினைகளுக்கு உள்ளாக நேரிடும்.
எனவே, இவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை’ என்று கூறியுள்ளார்.போதை தெளிந்த மணமகன், இனிமேல் குடிக்க மாட்டேன், பெண்ணை திருமணம் செய்துகொள்ளுகிறேன் என காவல் நிலையத்திலேயே கெஞ்சி பார்த்தும் மணமகள் பிடிவாதமாக மறுத்துவிட்டார்.vஉறவினர்கள் பலரும் மணமகளை சமரசம் செய்ய முயன்றபோதும், அவர் தன் முடிவில் உறுதியாக இருந்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது. போதை இளைஞரை மணக்க மறுத்த மணப்பெண்ணின் தைரியத்தை போலீஸாரும்,உறவினர்களும் பாராட்டினர்.