பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் சாதி பற்றி பேசியதால் ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த மாணவ,மாணவிகளுக்கு தனி அரசு பள்ளி வேண்டும் என மாணவ மாணவிகளுடன் பெற்றோர்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்பு தர்ணாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் சாதி பற்றி பேசியதால் ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த மாணவ,மாணவிகளுக்கு தனி அரசு பள்ளி வேண்டும் என மாணவ மாணவிகளுடன் பெற்றோர்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்பு தர்ணாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் அருகே தென்கரைக்கோட்டை ஊராட்சி வடகரை பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மொத்தம் 110 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். வடகரை ஆதி திராவிடர் காலனியை சேர்ந்த 45 மாணவ-மாணவிகளும் படிக்கின்றனர். 

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி பள்ளியில் மேலாண்மை குழு தேர்வு நடைபெற்றுள்ளது. மேலும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பதவிக்கு யாரும் முன்வராத நிலையில், அந்த பதவிக்கு ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சார்ந்த பெற்றோர் ஒருவர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். அப்போது உடனே மாற்று சமூகதத்தை சேர்ந்த மற்றொருவர் தான் போட்டியிடுவதாக விருப்பமுவதாக தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள், எப்போதும் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்களே உள்ளனர். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டுள்ளனர். இதற்கு உங்களை தேர்ந்தெடுத்தால், நாங்கள் உங்களை நாடி வரவேண்டியதாக இருக்கும். எனவே தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த உங்களை நாடி நாங்கள் வர முடியாது என்று மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனைதொடர்ந்து நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் தெரிவித்துள்ளனர். அப்போழுது சாதி பெயரை சொல்லி பேசியதாக குற்றச்சாட்டப்படுகிறது. இதனால் ஆதி திராவிடர் பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மாணவ,மாணவிகளுடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பெற்றோர்கள், ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த தங்களது குழந்தைகளக மட்டும் படிக்க தனி அரசுப்பள்ளியை கட்டிகொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் கல்விதுறை அதிகாரிகள் தர்ணாவில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்னர். 

அப்போது அதிகாரிகளிடம் பேசிய பெற்றோர்கள் தொடர்ந்து இது போன்ற சாதி பிரச்சனைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. எங்கள் பிள்ளைகள் யார் முன்னாடியும் கூனிகுறுகி நிற்க வேண்டாம். தங்கள் குழந்தைகள் சுதந்திரமாக படிக்க தனிப்பள்ளி அமைத்துக்கொடுப்பதாக உறுதியளித்த பிறகே தர்ணா போராட்டத்தை கைவிடுவோம் என்றனர்.