புரட்டாசி 3வது சனிக்கிழமை.. உதயநிதி அறக்கட்டளை சார்பில் பார்த்தசாரதி கோவிலில் பக்தர்களுக்குப் பிரசாதம்
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

புரட்டாசி சனி- கோயிலில் சிறப்பு தரிசனம்
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு விஷேசம். கோயில்களில் கூட்டம் களைகட்டும். புரட்டாசி மாதம் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது பெருமாளுக்கான விரதம் தான். பெருமாளுக்கு உரிய மாதமாக புரட்டாசி மாதம் சொல்லப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களுக்குப் பக்தர்கள் பெருமளவில் வருகைதருவது வழக்கம். புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமைகளில் பக்தர்கள் வருகை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். அதுவும் மற்ற வைணவத் தலங்களைவிடச் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் பக்தர்கள் அதிகமாக வருவார்கள். நீண்ட நேரம் வரிசையில் நின்று பெருமாளைத் தரிசிக்கும் பக்தர்களுக்கு ‘உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை’ சார்பில் ஆண்டுதோறும் பிரசாதம் வழங்குவது வழக்கம்.
பிரசாதம் வழங்கிய உதயநிதி அறக்கட்டளை
அந்தவகையில் இந்த ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமையின் தரிசனம் செய்த பக்தர்களுக்குச் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், புளியோதரை சாதம், தயிர் சாதம் போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டன. காலை நடை திறந்ததில் தொடங்கி நள்ளிரவு நடை சாத்தும் வரை நாள் முழுவதும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் நிர்வாகி பி.கே.பாபு, அவருடன் ராஜ்குமார், நரேஷ், பிரகாஷ், ஆனந்தன், மணிகண்டன், ஸ்ரீ கணேஷ் உள்படப் பலர் பக்தர்களுக்குப் பிரசாதங்களை வழங்கினர்.
இதையும் படியுங்கள்
தக்காளி, இஞ்சி, வெங்காயம் விலையில் மாற்றமா.? கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை நிலவரம் என்ன.?