Asianet News TamilAsianet News Tamil

பெளர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல அனுமதி.. எந்தெந்த தினங்களில் செல்லலாம்..?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெளர்ணமியையொட்டி நாளை மறுநாள் முதல் 15 ஆம் தேதி வரை பக்தர் சென்று வழிபாடு செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
 

Devotees are allowed to visit sathuragiri temple for 4 days
Author
Tamilnádu, First Published Jul 9, 2022, 1:01 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெளர்ணமியையொட்டி நாளை மறுநாள் முதல் 15 ஆம் தேதி வரை பக்தர் சென்று வழிபாடு செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

மேலும் படிக்க:நாளை ஆனி மாத பிரதோஷம்.. சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் நான்கு நாட்களுக்கு செல்ல அனுமதி..

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஒவ்வொரு மாத பிரதோஷம், அமாவாசை, பெளர்ணமி அகிய தினங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். அன்றைய நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கோவிலுக்கு வருகை தந்து, வழிபாடு செய்வர். எனவே அந்த நாட்களில் மட்டுமே மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினரால் அனுமதி வழங்கப்படும்.

மேலும் படிக்க:களைக்கட்டும் பக்ரீத் பண்டிகை.. மத நல்லிணக்கதை பறைசாற்றும் ஈகை திருநாள் கூறுவது என்ன..?

தொடர் கனமழை, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட சமயங்களில் மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதி கிடையாது. மேலும் கொரோனா தொற்று காரணமாக சதுரகிரி மலை கோவிலுக்கு சென்று பக்தர்கள் சென்று வழிப்பாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த மாதம், ஆனி மாத பிரதோஷம், அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலுக்கு செல்ல ஜூன் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 

மேலும் படிக்க:சென்னையில் 10 நாட்களுக்கு எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து மாற்றம்? இதோ முழு விவரம்..!

இந்நிலையில் தற்போது  பெளணர்மியையொட்டி நாளை மறுநாள் முதல் 15 ஆம் தேதி வரை பக்தர் சென்று வழிபாடு செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios